Aadai film: சிந்து சமவெளி முதல் ஆடை "இல்லா" அமலா பால் வரை!

சென்னை: நடிகை அமலா பால் மைனா படத்தில் நடித்ததன் மூலம் வெகுவாகப் பாராட்டி பேசப்பட்டார். ஆனால், பலருக்கும் தெரியாது அவர் நடித்து வெளி வந்த முதல் படம் சிந்து சமவெளி படம் என்று.

இது அடல்ஸ் ஒன்லி படம், இந்த படத்தில் அமலா பாலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் ஒரு ஹவுஸ் மேடா இருந்த ஹரீஷ் கல்யாண். கதை என்னன்னா ஹரீஷ் கல்யாண் மனைவியாக நடித்த அமலா பால் கதாபாத்திரம் அந்த படத்தில் வாழ்ந்தது என்னவோ மாமனாருடன். இப்படி சர்ச்சையை ஏற்படுத்திய படத்தில்தான் அறிமுகமானார் அமலா பால்.

மைனா படத்தில் இவரின் நீளமான கண்களைப் பார்த்துதான் பிரபு சாலமன் தன் படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தாராம். இதை அவரே சொல்லி இருக்கார் ஒரு நேர் காணலில். ஆனால், அப்போது தான் சிந்து சமவெளி படத்தில் நடித்து வருவதை அமலா பால், பிரபு சாலமனிடம் சொல்லவே இல்லையாம்

சிந்து சம வெளி அமலா

சிந்து சம வெளி அமலா

மைனா வெளி வருவதற்குள் சிந்து சமவெளி படம் வெளிவந்து, பிரபு சாலமனுக்கு எல்லாரும் போன் போட்டு கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.எ ன்ன இந்த பொண்ணை போயி நடிக்க வச்சு இருக்கீங்க... படம் ஓடணுமா, வேணாமான்னு கேட்கும் அளவுக்கு. பிரபு சாலமன் படத்தைப் பார்த்துட்டு நொந்து போயி, ரொம்ப நாள் அமலா பால் கிட்ட பேசவே இல்லையாம். அமலா பால் சாரி கேட்ட பின்னரே உன்னை ஹோம்லியா மைனாவில் காமிச்சு இருக்கேன்.. இப்படி பண்ணிட்டியேன்னு கேட்டாராம்.

சிந்து சம வெளி

சிந்து சம வெளி

இதில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், மைனா வந்து சூப்பர் ஹிட் ஆனதைப் பயன் படுத்திக்க, சிந்து சமவெளி படத்தை மீண்டும் பெரிய பெரிய போஸ்டர்கள் எல்லாம் அடித்து உடனடியா செகண்ட் ரிலீஸ் கூட பண்ணினார்கள். அப்போதும், அமலாவின் இமேஜைப் பத்தி கவலைப்படாத ஏ.எல். விஜய் தெய்வத் திருமகள் படத்தில் அமலா பாலை நடிக்க வைத்தார்.

மலர்ந்த தருணம்

மலர்ந்த தருணம்

இந்த படத்தில் அமலா பாலை நடிக்க வைக்கும் போதுதான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து இருக்கிறது. அதன் பிறகு விஜயை வைத்து இயக்குநர் விஜய் இயக்கிய தலைவா படத்துக்கும் அமலா பால் மீது காதலால் கசிந்து உருகிய ஏ.எல்.விஜய் அமலா பாலை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இந்த படத்தின் போதுதான் ,இருவரும் காதல் போதையில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சேர்ந்து சென்று மகிழ்ந்தார்கள்.

போனை எடுக்க

போனை எடுக்க

காதலிக்கும் போதே தூங்கினால் அமலா பாலை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதாம். விஜய் போன் செய்தால்கூட, கட் பண்ணிட்டு தூங்கிடுவார்.என்று விஜய் கூறி இருக்கார்.அமலாபால் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடிக்காத படம் எது என்று கேட்டபோது சிந்து சமவெளி என்று சொல்லி இருந்தார்..

கல்யாணம் நடந்தது

கல்யாணம் நடந்தது

ஒரு வழியாக ஏ.எல்.விஜய்க்கும், அமலாபாலுக்கும் கல்யாணம் முடிவானது. விஜய் வீட்டு வழக்கமான செட்டிநாடு முறைப்படி செட்டிநாட்டு பகுதியில் கல்யாணமும், அமலாபால் விருப்பப்படி கேரளாவில் சர்ச்சில் கல்யாணமும் மிக நன்றாகத்தான் நடந்தது. என்னவாயிற்றோ, ஏதாயிற்றோ அடுத்த சில மாதங்களில் தம்பதி டைவர்ஸுக்காக கோர்ட் வாசலுக்கு போனார்கள்.விவாகரத்தும் ஆகிவிட்டது.

ஆடை படம்

நல்ல நடிகை, நல்ல பெண் வாழ்க்கையை இழந்து விட்டாரே என்று உண்மையான ரசிகர்கள் கவலையில் இருந்த போது ,மீண்டும் சில நல்ல படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தார் அமலா. இப்போது ஏ.எல்விஜய்க்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப்போகுது. .அமலா பாலுக்கு ஆடை படம் ரிலீஸ் ஆகப்போகுது. சிந்து சமவெளி படத்தின் மூலம் சர்ச்சையில் மாட்டிக் கொண்டது போல இல்லாமல் அமலா பால் நன்றாக இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X