Just In
- 2 min ago
பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் பேசியது என்ன? சுரேஷ் தாத்தா டிவிட்ட பாருங்க மக்களே!
- 18 min ago
உங்கள் முடிவுகள் அறிவிக்கப்படப் போகும் நாள்.. 6 மணி நேர பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே.. அட்டகாச புரமோ!
- 39 min ago
மக்கள் செல்வனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. கொண்டாடி வரும் ரசிகர்கள்!
- 48 min ago
ஹீரோ ரேஞ்சுக்கு பறந்து பறந்து உதைக்கும் தோனி பட நடிகை.. வைரலாகும் வீடியோ!
Don't Miss!
- News
தமிழகத்தில் இன்று 610 பேருக்கு கொரோனா பாதிப்பு - 775 பேர் குணமடைந்தனர்
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Automobiles
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்ச்சில் பிரார்த்தனை தான் நடந்தது... நிச்சயதார்த்தம் நடக்கவில்லை: அமலாபால் அப்பா திடுக் தகவல்
சென்னை: கடந்த 7ம் தேதி கேரள சர்ச்சில் நடந்தது பிரார்த்தனை மட்டுமே, நிச்சயதார்த்தம் அல்ல என விளக்கமளித்துள்ளார் நடிகை அமலா பாலின் தந்தை.
மைனா படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த 7ம் தேதி கேரளாவில் நடிகை அமலாபாலின் சொந்த ஊரில் நிச்சயதார்த்தமும், இன்று சென்னையில் திருமணமும் இனிதே நடந்து முடிந்துள்ளது.
அமலாபால் - விஜய் இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்ற புகைப்படங்கள் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம், சர்ச்சில் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்ததாக அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்
இது தொடர்பாக அவர் கேரளாவில் உள்ள வரபுழா டயோசிசன் பாதிரியாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-

பிடித்தமான சர்ச்...
என்னுடைய மகள் அமலாபால் ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தின் அருகேயுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார். எனவே, அவர் சிறு வயது முதலே இந்த சர்ச்சுக்குத்தான் சென்று வருகிறார்.

திருமணத்திற்கு முந்தைய பிரார்த்தனை...
எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர் இந்த சர்ச்சில் சென்று பிரார்த்திப்பது உண்டு. அவர் திருமணத்திற்கு முன் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். இதன்படி கடந்த 7ம் தேதி சர்ச்சில் பிரார்த்தனை மட்டுமே நடத்தினார் .

பிரார்த்தனை மட்டும் தான்...
கத்தோலிக்க மரபுபடி திருமண நிச்சயதார்த்தமோ வேறு நிகழ்ச்சியோ நடக்கவில்லை. சர்ச்சில் பிரார்த்தனை 10 நிமிடம் மட்டுமே நடந்தது.

தவறான தகவல்...
சர்ச்சில் எனது மகளின் நிச்சயதார்த்தம் நடந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் தவறானதாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த விளக்கம்...?
அமலாபாலும், விஜய்யும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவர் அல்லாத ஒருவருக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாலேஉயே அமலாபாலின் தந்தை இவ்வாறு விளக்கமளித்திருப்பதாகக் கூறப்படுகிறாது.