பாறை மீது பக்காவாக உட்கார்ந்திருக்கும் அமலா பால்.. வழக்கம் போல கேப்ஷனில் பொழியுது தத்துவம்!
சென்னை: நடிகை அமலா பால் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாறை மீது அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை அமலா பால், வழக்கம் போல கேப்ஷனில் தத்துவங்களாக பொழிந்து தள்ளி உள்ளார்.
மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க, அதனால் தான் இப்படியே கேப்ஷன் போட்டு வறீங்க என்றும் சில நெட்டிசன்கள் அமலா பாலை கிண்டல் அடித்து வருகின்றனர்.

கணவருடன் விவாகரத்து
இயக்குநர் ஏ.எல். விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார். கணவரை பிரிந்த நிலையில், தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சில படங்களில் இருந்தும் அமலா பால் நீக்கப்பட்டார்.

இரண்டாவது திருமண வதந்தி
மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங் உடன் நடிகை அமலா பால் லிவின்னில் உள்ளார் என்றும், அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளியான புகைப்படங்கள் பரபரப்பை கிளப்பின. ஆனால், தனது அனுமதியில்லாமல் பவ்னிந்தர் சிங் வெளியிட்ட புகைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமலா பால் அதிரடி காட்டினார்.

ஆந்தாலஜி படங்களில்
ஆடை படத்திற்கு பிறகு நடிகை அமலா பால் நடித்த அதோ அந்த பறவை போல படம் இன்னமும் வெளியாகாத நிலையில், ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரியில் நடிகை அமலா பால் கெளதம் மேனன் இயக்கத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும், தெலுங்கில் வெளியான நெட்பிளிக்ஸின் பிட்ட கதலு ஆந்தாலஜியில் மீரா என்கிற கதையில் நடித்திருந்தார் அமலா பால்.

ஆன்மீக சுற்றுலா
தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை மறப்பதற்காக ஆன்மிக சுற்றுலா செய்து வருகிறார் நடிகை அமலா பால். ஈஷா யோகா மையத்தில் சிறிது காலம் தங்கியிருந்து தியான வகுப்புகளை கற்றுக் கொண்ட அவர், ரிஷிகேஷில் தற்போது ஆன்மிக தேடலில் இருந்து வருகிறார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பாறை மீது
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருக்கும் இரவு நேரத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை அமலா பால். மேலும், வழக்கம் போல தனது கேப்ஷனில் தத்துவ மழையையும் பொழிந்து தள்ளி உள்ளார்.

அமலா பால் தத்துவம்
அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வரும் அமலா பால், அதற்கு கேப்ஷனாக சில தத்துவங்களையும், தத்துவ புத்தகங்களில் சொல்லப்பட்ட வாசகங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படத்துடன் நமது துன்பம் நம்மை விட்டு ஒரே அடியாக நீங்கி விடாது என்றும், அது சிறிது காலம் சற்றே குறைந்து காணப்படும் என்றும், மீண்டும் அது நம்மை பின் தொடரும் என நீண்டதொரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
அமலா பாலின் புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் லைக் செய்து வரும் நிலையில், அமலா பாலின் தத்துவ கேப்ஷனை பார்த்து சில நெட்டிசன்கள் வழக்கம் போல தத்துவம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க அதனால் தான் இப்படியெல்லாம் கேப்ஷன் போடுறீங்க, ரிலாக்ஸ் ஆகுங்க என அட்வைஸும் ட்ரோலும் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











