‘குழந்தை’.. தமிழில் டிவிட் போட்ட அமலாபால்.. நவரசத்தையும் கலந்து விதவிதமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அமலாபால் வெளியிட்ட தமிழ் டிவிட்டர் பதிவை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சென்னை: நடிகை அமலாபால் டிவிட்டரில் வெளியிட்ட ஒரு போட்டோவிற்கு ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர்.

விவாகரத்திற்கு பின் மீண்டும் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். தமிழில் ஆடை, அதோ அந்தப் பறவை போல போன்ற படங்களில் நடித்து வரும் அவர், ஷூட்டிங் இல்லாத நாட்களில் எங்கேயாவது சுற்றுலாப் பறந்து விடுகிறார்.

அங்கு எடுக்கப்படும் கவர்ச்சியான படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

போட்டோ வைரல்:

போட்டோ வைரல்:

ஏற்கனவே அவர் லுங்கி அணிந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது அதே போல், அவரது மற்றொரு படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாறை ஒன்றில் அமலாபால் படுத்திருப்பது போன்ற கருப்பு வெள்ளைப் புகைப்படம் தான் அது.

தமிழில் டிவீட்:

தமிழில் டிவீட்:

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த புகைப்படத்துடன் கூடிய டிவீட்டை தமிழில் வெளியிட்டுள்ளார் அமலாபால். அதில் அவர், ‘இயற்கையின் மடியில் குழந்தையாய் நான்' எனத் தெரிவித்துள்ளார்.

கமெண்டுகள்:

கமெண்டுகள்:

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். சிலர் புகைப்படம் அழகாக இருப்பதாக பாராட்டியுள்ளனர். வேறு சிலரோ சொல்ல முடியாத அளவிற்கு ஆபாசமான கமெண்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

ரசிகர்கள் ஆச்சர்யம்:

இந்த ரசிகர், ‘அமலா உங்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா?' என ஆச்சர்யப்பட்டுள்ளார். நிச்சயமாக இதனை வேறு யாரோ தான் உங்களுக்கு எழுதித் தந்திருக்க வேண்டும் என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X