அமலா பால் - இயக்குநர் விஜய்... கொச்சியில் நிச்சயதார்த்தம்; சென்னையில் திருமணம்!
சென்னை: நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் திருமணம் என்பது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டது.
விஜய் இயக்கத்தில் முதல் முதலாக அமலா பால் நடித்த படம் தெய்வத் திருமகள். இந்தப் படம் ஷூட்டிங்கிலிருந்த போதே, இருவருக்கும் மிக நெருங்கிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அதை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

தலைவாவில்...
இந்த நிலையில் விஜய் இயக்கிய தலைவா படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில்தான் கிட்டத்தட்ட இவர்கள் திருமணம் செய்து கொள்வது உறுதி எனும் அளவுக்கு தகவல்கள் வெளியாகின. படத்தில் பணியாற்ற மற்ற கலைஞர்களும் இதை உறுதிப்படுத்தினர்.

அறிவிப்பு
இப்போது அந்த உறவை அமலா பாலே பகிரங்கப்படுத்திவிட்டார். விஜய்க்கும் தனக்குமான உறவு, தங்கள் எதிர்காலம் குறித்து விரைவில் பிரஸ் மீட் வைத்து அனைவருக்கும் சொல்வதாக அவர் அறிவித்துள்ளார்.

அமலா பால் அம்மா
இதற்கிடையே, இருவரின் திருமணம் குறித்தும் அமலா பாலின் அம்மா உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு பத்திரிகைப் பேட்டியில், மகள் அமலா பாலின் செல்போன் பில் எக்கச்சக்கமாக எகிறிய போதே அவருக்கும் இயக்குநர் விஜய்க்கும் காதல் என்பதை தான் உறுதிப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொச்சியில் நிச்சயதார்த்தம்
இருவருக்கும் கொச்சியில் வைத்து நிச்சயதார்த்தம் என்றும், சென்னையில் திருமணம் என்றும் அவர் கூறியுள்ளார். திருமணத் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறார்களாம்.
சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபம் இவர்கள் திருமணத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











