அமலாபால் சொன்ன பாய் பிரண்ட் இவர் தானா.. வைரலாகும் புகைப்படம்!

அமலாபாலின் காதலர் என ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

Recommended Video

Amala paul's news lover photo | அமலா பாலின் ஆண் நண்பர், வைரலாகும் புகைப்படம்!

சென்னை: அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிந்து சமவெளி என முதல் படம் சர்ச்சையில் சிக்கினாலும், மைனா தந்த பாராட்டால் தமிழின் முன்னணி நடிகையாக உயர்ந்தார் அமலா பால். தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த போதே, இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்து போனது. இதனால் மீண்டும் நடிப்பிற்கு திரும்பிய அமலாபால், துணிச்சலான பல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆடை

ஆடை

அம்மா கணக்கு படத்தில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு அம்மாவாக நடித்தார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலா பாலின் துணிச்சலை திரையுலகினர் பாராட்டினர்.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

அப்போது தனக்கு இப்படத்தில் நடிக்க பெரிதும் உதவியது தனது ஆண் நண்பர் தான் என வெளிப்படையாகக் கூறினார் அமலாபால். அதோடு, அந்த ஆண் நண்பருடன் தான் பாண்டிச்சேரியில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவர் யார் என்பதைக் கூற மறுத்து விட்டார் அமலாபால்.

ஆர்வம்

ஆர்வம்

அந்த நண்பர் திரையுலகைச் சேர்ந்தவர் இல்லையென்று மட்டும் அவர் ஒரு க்ளூ கொடுத்திருந்தார். இதனால் அமலாபாலின் காதலர் யாராக இருக்கும் என்ற தேடல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதோடு அந்த நபரைப் பற்றி அமலாபால் உயர்வாகப் பேசி இருந்ததால், அவரைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் ரசிகர்களுக்கு உண்டானது.

பரம ரகசியம்

பரம ரகசியம்

ஆனால் தனது ஆண் நண்பர் குறித்து தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறார் அமலாபால். தொடர்ந்து சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக படங்களை வெளியிட்டு வந்த போதும், தப்பித் தவறிக்கூட தன் ஆண் நண்பர் பற்றி பதிவு ஏதும் அவர் வெளியிடவில்லை.

புகைப்படம் வைரல்

புகைப்படம் வைரல்

இந்நிலையில் அமலாபாலின் காதலர் இவர் தான் என ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் உள்ள ஒரு புகைப்படத்தில் அமலாபாலும், அந்த நபரும் அருகருகே நெருக்கமாக நிற்கின்றனர். மற்ற சில புகைப்படங்களில் அவருடன் வேறு சிலரும் உள்ளனர்.

உண்மையா?

உண்மையா?

ஏதோ மலைப் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது போன்று அந்த புகைப்படம் உள்ளது. ஆனால், அதில் உள்ள அமலாபாலின் நண்பர் பற்றி வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

மறுமணம்

மறுமணம்

அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குநர் விஜய் சமீபத்தில் தான் மறுமணம் செய்து கொண்டார். எனவே, அமலாபாலும் விரைவில் வெறொரு திருமணம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X