ஆசை ஆசையாய் போட்டோ போட்ட அமலா பால்: முகம் சுளித்த நெட்டிசன்ஸ்
சென்னை: நடிகை அமலா பால் ஆசை ஆசையாய் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர்.
அமலா பால் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த அந்த துயர சம்பவத்திற்கு பிறகு படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நேரம் கிடைக்கும்போது நெடுந்தூர பயணம் சென்று வருகிறார்.
வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்
ஒர்க்அவுட்
அமலா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த பிறகு செல்ஃபி எடுத்து அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தாகூரின் தத்துவத்துடன் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கலாய்
அமலா ஒர்க்அவுட் செய்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த ரசிகர்களோ அவரின் உடையை பற்றி விமர்சித்துள்ளனர். சிலரோ மேக்கப் இல்லாமல் பார்க்க முடியவில்லை என்று கலாய்த்துள்ளனர்.

வரி
நாக்கை தொங்கப் போட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, இது கேரளா வருமான வரித்துறை பற்றி கேட்டபோது க்ளிக்கியது என்று கமெண்ட் போட்டுள்ளனர்.

வேண்டாம்
சிலர் அமலாவின் அழகை புகழ்ந்து பேசியுள்ளனர். சிலரோ தயவு செய்து தாகூர் போன்ற பெரிய மகானின் தத்துவத்தை நீங்கள் பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











