»   »  ஹன்சிகா ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய அமலா பால்

ஹன்சிகா ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எர்ணாகுளம்: அமலா பால் தனது 26வது பிறந்தநாளை ஏழைக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்தாலும் மனம் தளராமல் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரொம்ப கவர்ச்சியாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமலா கடந்த 26ம் தேதி தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

பிறந்தநாளை தனது சொந்த ஊரான எர்ணாகுளத்தில் கொண்டாடினார் அமலா பால். 30 ஏழை பெண் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

செலவு

செலவு

30 ஏழை பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளார் அமலா பால். அந்த குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார் அமலா.

கவர்ச்சி

கவர்ச்சி

திருட்டுப் பயலே 2 படத்தில் அமலா பால் கவர்ச்சியாக நடித்துள்ளாராம். மேலும் துணிந்து முத்தக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

மலையாளம்

மலையாளம்

தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், சின்ட்ரெல்லா ஆகிய படங்களிலும், மலையாளத்தில் காயங்குளம் கொச்சுன்னி படத்திலும் நடித்து வருகிறார் அமலா பால்.

English summary
Actress Amala Paul has celebrated her 26 birthday with kids from poor sections of Ernakulam. She is sponsoring education for 30 girl students.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil