காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!

சென்னை: பாவக் கதைகளை தொடர்ந்து அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பாலிவுட் இயக்குநர்கள் இணைந்து உருவாக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன் வரிசையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் இயக்கி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்தாலஜி அத்தியாயம்

ஆந்தாலஜி அத்தியாயம்

சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. லஸ்ட் ஸ்டோரீஸ், பாவக் கதைகள் வரிசையில் தற்போது பிட்ட காதலு ஆந்தாலஜி படம் அடுத்த மாதம் வெளியாகிறது.

லஸ்ட் ஸ்டோரீஸ்

லஸ்ட் ஸ்டோரீஸ்

பாலிவுட் இயக்குநர்களான ஜோயா அக்தர், அனுரக் காஷ்யப், கரண் ஜோஹர் மற்றும் திபாகர் பானர்ஜி இணைந்து இயக்கிய நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரீஸ் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. வெப்சீரிஸ்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கவும் இந்த ஆந்தாலஜி மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

பிரபல நட்சத்திரங்கள்

பிரபல நட்சத்திரங்கள்

பிரபல இயக்குநர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு கதையிலும் ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, புமி பெட்னேகர், விக்கி கவுஷல், மணிஷா கொய்ராலா, நேகா தூபியா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் லஸ்ட் ஸ்டோரிஸில் நடித்ததன் மூலம் அதன் வெற்றி பன்மடங்காக மாறியது. டைட்டிலே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருந்து, காட்சிகளும் கவர்ச்சி எல்லை மீறினால் சும்மாவா சொல்லணும்..

பிட்ட கதலு

பிட்ட கதலு

இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் லஸ்ட் ஸ்டோரீஸ் உருவாகப் போவதாகவும், அமலா பால், ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்தியா இன்று பிட்ட கதலு என்ற டைட்டிலில் உருவாகி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் டீசரை வெளியிட்டு வைரலாக்கி வருகிறது.

ஆடைக்கு பிறகு

ஆடைக்கு பிறகு

2019ம் ஆண்டு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நடித்த அமலா பால், அதன் பின்னர் எந்தவொரு ரிலீசையும் செய்யவில்லை. அவர் நடிப்பில் உருவான அதோ அந்த பறவை போல திரைப்படமும் இன்னமும் ரிலீசாகவில்லை. இந்நிலையில், பிட்ட கதலு ஆந்தாலஜியில் அமலா பால் நடித்துள்ள டீசர் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ஸ்ருதியும் இருக்காரு

ஸ்ருதியும் இருக்காரு

அமலா பாலை தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனும் இந்த ஆந்தாலஜியில் ஒரு கதையில் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள டீசரில், 4 முன்னணி நடிகைகளான அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு இருக்கும் அதிரடி டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

விருது வென்ற இயக்குநர்கள்

விருது வென்ற இயக்குநர்கள்

நடிகையர் திலகம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் நாக் அஷ்வின், நந்தினி ரெட்டி, சங்கல்ப் ரெட்டி மற்றும் தேசிய விருது வென்ற தருண் பாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னணி இயக்குநர்கள் இணைந்து இந்த ஆந்தாலஜியை தெலுங்கு மொழியில் இயக்கி உள்ளனர்.

எப்போ ரிலீஸ்

லிப் லாக், படுக்கையறை காட்சிகள், காதல், ஏமாற்றம், துரோகம், காமம் என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியான பிட்ட கதலு அடுத்த மாதம் காதலர் தினம் முடிந்த பிறகு பிப்ரவரி 19ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

காமக் கதைகள்

காமக் கதைகள்

இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியை அறிமுகம் செய்யும் நெட்பிளிக்ஸ் தமிழில் பாவக் கதைகளை சமீபத்தில் வெளியிட்டு ஹிட்டாக்கியது. காமக் கதைகள் என்கிற பெயரில் விரைவிலேயே தமிழிலும் ஒரு ஆந்தாலஜி வெளியாகுமா? இங்கே எதிர்ப்புகள் குவியும் என்பதால் தான் பாவக் கதைகளை வெளியிட்டார்களா என்கிற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X