அடேங்கப்பா.. அமலா பால் என்ன குரங்கு மாதிரி தாவுறாரு.. அருவியில் இருந்து அப்படியொரு ஜம்ப்.. வீடியோ!
பாலி: நடிகை அமலா பால் சினிமா ஷூட்டிங் பிசியில் இருந்து சற்றே ஒதுங்கி தனது ஹாலிடேவை ஆன்மிக ரீதியாகவும், கவர்ச்சி பொங்கவும் கொண்டாடி வருகிறார்.
பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் சமீபத்தில் அங்கே உள்ள கோயில் குளத்தில் குளிக்கும் போட்டோக்களையும் குரங்குடன் எடுத்த செல்ஃபிக்களையும் ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பாறை மீது கிடுகிடுவென ஏறி அப்படியே தண்ணீரில் டைவ் அடிக்கும் காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

ஏஎல் விஜய்யுடன் விவாகரத்து
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம், அனுஷ்கா நடித்த தெய்வ மகள் படத்தில் நடித்த அமலா பாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து நடிகர் விஜய்யின் தலைவா படத்திலும் அமலா பால் ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் அமலா பாலுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், காதலித்து திருமணம் செய்த இருவருக்கும் மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. அமலா பால் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

ஆடை பட சர்ச்சை
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல் நடிகை அமலா பால் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இனிமேல் பெண்கள் யாரும் அமலா பால் படத்தை பார்க்க மாட்டார்கள் என்றும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கக் கூடாது என பெரிய பஞ்சாயத்தே கோலிவுட்டில் அரங்கேறியது. ஆடை படத்தின் சர்ச்சைக்கு பிறகு சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த அமலா பால் குட்டி ஸ்டோரி, கடாவர் படங்கள் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

பாலி தீவில் சுற்றுலா
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட நடிகை அமலா பால் சமீப காலமாக பாலி தீவில் சுற்றுலா செய்து வருகிறார். விஷ்ணு கோயில் குளம் ஒன்றில் அமலா பால் குளித்தபடியே பிரார்த்தனை செய்த போட்டோக்களை மகா சிவராத்திரி அன்று வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

குரங்கு போல பாறையில் ஏறி
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். பாலி தீவில் ஒரு பாறை மீது கட கடவென குரங்கு போல ஏறி உச்சியில் இருந்து அருவியில் இருந்து ஓடும் நீரோடையில் குதித்து நீந்தும் வீடியோவை வெளியிட்டு தனது சாகசத்தை காட்டி உள்ளார் அமலா பால்.

என்னவொரு ஜம்ப்
அந்த பாறை மீது அமலா பால் ஏறும் காட்சிகளை ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த அருவியின் நீரோடையில் அப்படியொரு ஜம்ப் அடித்து அமலா பால் உற்சாக குளியல் போட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சிக் கொட்டி வருகின்றனர். அமலா பாலுக்கு அப்போ டூப் போடாமலே ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்க வைக்கலாம் போலவே என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
ஊஞ்சல் கட்டி ஆடுறாரு
அங்கேயே மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் கொஞ்சம் கூட பயமில்லாமல் பிகினி உடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக அமலா பால் விளையாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். என்னம்மா வாழுறாரு அமலா பால் என்றும் நாங்களும் கூட வரலாமா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











