எந்த தைரியத்தில் நிர்வாண காட்சியில் நடித்தேன்?: அமலா பால் விளக்கம்
Recommended Video
சென்னை: ஆடை படத்தில் எந்த தைரியத்தில் நிர்வாண காட்சியில் நடித்தார் என்பது குறித்து அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் வித்தியாசமாக நடித்துள்ள ஆடை படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அமலா பால் நிர்வாணமாக நடித்தது தான். இருப்பினும் அவரின் தைரியத்தை பலரும் பாராட்டினார்கள், பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர் இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

சினிமா
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்று கூறி என்னைத் தேடி வந்த கதைகள் எல்லாம் பொய். அதனால் சினிமாவை விட்டு விலகி விட விரும்புவதாக என் மேனேஜரிடம் கூறினேன். பலாத்காரம் செய்யப்பட்ட பெண், கஷ்டங்களை தாண்டி பழிவாங்குவது அல்லது கணவருக்கு ஆதரவாக இருக்கும் மனைவி, தியாகம் செய்யும் தாய் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

அதிர்ச்சி
சினிமாவை விட்டு விலக நினைத்த நேரத்தில் தான் ஆடை படத்தின் கதை சுருக்கம் வந்தது. அதை படித்தபோதே அதிர்ச்சி அடைந்தேன். இது தமிழா, இந்தியா, ஆங்கிலப் படமா என்று வியந்தேன். இந்த படத்தை தயாரிக்கவும் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்பதை தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.

ரத்ன குமார்
ரத்ன குமார் என்னை சந்தித்து கதை சொன்னபோது இது ஒரிஜினில் ஸ்க்ரிப்ட் என்று எனக்கு தோன்றவில்லை. இது ஏதாவது ஆங்கில படத்தின் ரீமேக்கா என்று இயக்குநரிடம் கேட்டேன். நிர்வாணமாக நடிக்கும் காட்சியில் சிறப்பு உடை அணியலாம் என்றார் தயாரிப்பாளர். அது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நான் தெரிவித்தேன்.

அமலா பால்
நிர்வாணமாக நடிக்க வேண்டிய நாள் வந்தபோது பதட்டமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது தான் பதட்டம் ஏற்பட்டது. செட்டில் என்ன நடக்கப் போகிறது, யார் யார் எல்லாம் இருப்பார்கள், போதிய பாதுகாப்பு இருக்குமா என்று பயம் வந்தது. செட்டில் 15 பேர் மட்டுமே இருந்தார்கள். படக்குழு மீது இருந்த நம்பிக்கையில் தான் அந்த காட்சியில் நடித்தேன். படத்தை பார்க்காமலேயே விமர்சிப்பவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











