வெப் சீரிஸில் செம பிசி.. யு-டர்ன் இயக்குனரின் ஃபேன்டஸி த்ரில்லரில் ஹீரோயின் ஆன அமலா பால்!

By

சென்னை: நடிகை அமலா பால் இப்போது வெப் சீரிஸில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை அமலா பால், இன்ஸ்டாகிராமில் அதிக ஆக்ட்டிவாக இருக்கிறார். அளவில்லாத புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடிக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவா சென்றிருந்த அவர் அங்கிருந்து புதிய ஸ்டில்களை வெளியிட்டு வந்தார்.

அந்த பறவை போல

அந்த பறவை போல

தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார், அமலா பால். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது, அதோ அந்த பறவை போல ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

வெப்சீரிஸ் ரீமேக்

வெப்சீரிஸ் ரீமேக்

மலையாளத்தில், பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிசின் ரீமேக்கில் நடித்து வருகிறார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள அமலா பால், இப்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

குடி யெடமைதே

குடி யெடமைதே

தற்போது இவர் யூ டர்ன் இயக்குநர் பவன் குமார் இயக்கும், குடி யெடமைதே (Kudi yedamaithe) என்ற தெலுங்கு வெப் சீரிஸில் முதன்மை கேரக்டரில் நடிக்கிறார். 8 பகுதிகள் கொண்ட இந்த தொடர், ஆஹா தளத்துக்காக எடுக்கப்படுகிறது. இதுவரை கண்டிராத வகையிலான, ஃபேன்டஸி திரில்லராக இது உருவாகிறது.

டெலிவரி பையன்

டெலிவரி பையன்

இத்தொடரில் அமலா பால் ஜோடியாக ராகுல் விஜய் நடிக்கிறார். இது வழக்கமான ஹீரோ- ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் அல்ல. இந்தக் கதையின் மையம் ஒரு காவல் துறை அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் நடக்கும் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி

நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி

இது தவிர நந்தினி ரெட்டி இயக்கும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி சீரிஸிலும் அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார். தற்போது சொந்த தயாரிப்பில் உருவாகும் கடாவர் (cadaver) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

விஷேஷ் பிலிம்ஸ்

விஷேஷ் பிலிம்ஸ்

விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இது தவிர ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் விஷேஷ் பிலிம்ஸ் தயாரிக்கும் வெப்சீரிஸ் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இந்த தொடர் எப்போதோ தொடங்கி இருக்க வேண்டும். கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X