சத்தம் இல்லாமல் 2வது திருமணம்.. வைரலாகும் அமலா பால் திருமண புகைப்படங்கள்.. அந்த லிப் லாக் வேறலெவல்!

சென்னை: நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங்குடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Amala Paul Live in Relationship | singer Bhavninder Singh | Web Series

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அமலா பால், கடைசியாக ஆடை படத்தில் முழு நிர்வாணமாக துணிச்சலாக நடித்திருந்தார்.

இயக்குநர் ஏ.ஆர். விஜய்யை விவாகரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டுள்ளார் அமலா பால்.

காதலனுடன் லிவ் இன்

காதலனுடன் லிவ் இன்

ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக அவரது மார்க்கெட் காலியானது. ஆனால், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அமலா பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, மும்பையை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் என்பவருடன் அமலா பால் லிவ் இன்னில் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இந்நிலையில், நடிகை அமலா பால், சத்தமின்றி தனது இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார் என்பது, தற்போது வெளியாகியுள்ள திருமண புகைப்படங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது. அமலா பாலை விவாகரத்து செய்த ஏ.எல். விஜய் இரண்டாவது திருமணம் செய்த நிலையில், தற்போது அமலா பாலும் இரண்டாவது திருமணத்தை செய்துள்ளார்.

லிப் லாக்

லிப் லாக்

காதலன் பவிந்தர் சிங்குடன் இந்து முறைப்படி நடிகை அமலா பால் திருமணம் செய்து கொண்டுள்ளார். வட இந்தியாவில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது வெளியாகியுள்ள புகைப்படங்களின் வழியாக தெரிகிறது. மேலும், திருமணத்திற்கு பிறகு அமலா பால் மற்றும் பவிந்தர் சிங் கொடுத்துக் கொண்ட ஹாட் லிப் லாக் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தனுஷ் மீது குற்றச்சாட்டு

தனுஷ் மீது குற்றச்சாட்டு

இயக்குநர் ஏ.எல் விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன், சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில், அமலா பால் - விஜய் பிரிய நடிகர் தனுஷ் தான் காரணம் என வீண் பழி சுமத்தியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு, நடிகை அமலா பாலும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது காதலனுடன் திருமணம் செய்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

ரகசியமாக

ரகசியமாக

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அமலா பால், மீடியாக்கள் மற்றும் பிரபலங்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக யாரையும் அழைக்காமல் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X