''ஆர்யா-அமலாபால் திடீர் திருமணம்'''

By Mayura Akilan

சென்னை: கோவையில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை அமலாபாலுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்தை நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடத்தி வைத்தார்.

இந்த திருமணக் காட்சி அவர் இயக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற படத்திற்காக படமாக்கப்பட்டது.

மணக்கோலத்தில் அமலாபால்

மணக்கோலத்தில் அமலாபால்

ஆர்யா, அமலாபால் ஆகியோர் திருமணக் கோலத்தில் மணமேடைக்கு வந்தனர். நிஜ திருமணம் போலவே மண்டபம் அலங்கரிக்கப்பட்டு, திருமண மேடை பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தாலி கட்டிய ஆர்யா

தாலி கட்டிய ஆர்யா

பின்னர் கெட்டிமேளம் முழங்க அமலாபால் கழுத்தில் தாலி கட்டினார் ஆர்யா. திரைப்படப் படப்பிடிப்புதான் என்றாலும் பொதுமக்கள் குவிந்திருந்ததால் மண்டபத்தின் வெளியே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பார்த்தீபன் இயக்கம்

பார்த்தீபன் இயக்கம்

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் பார்த்திபன். அவரே இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

தனுஷ்- சூர்யா- நஸ்ரியா

தனுஷ்- சூர்யா- நஸ்ரியா

இதில் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் கெளரவ தோற்றத்தில் நடிக்கின்றனர்.

வேஷ்டி கட்டிய அமலாபால்

வேஷ்டி கட்டிய அமலாபால்

கதை, திரைக்கதை வசனம், இயக்கம் படத்தில் அமலாபால் வேஷ்டி, சட்டை அணிந்து ஒரு காட்சியில் நடிக்கிறாராம். இது கணவன் மனைவி இடையேயான அந்நியோன்யத்தை வெளிப்படுத்தும் என்கிறார் இயக்குநர் பார்த்தீபன்.

ஒரு நிமிடக்கோபம்

ஒரு நிமிடக்கோபம்

இந்தப் படத்தில் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக அமலாபால் கூறினார். ஒரு நிமிடம் மகிழ்ச்சி மறுநிமிடம் கோபம் என்று நடிப்பது சுவாரஸ்யமாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சினிமா திருமணங்கள்

சினிமா திருமணங்கள்

ராஜா ராணி திரைப்படத்தில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காகவே, ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடக்கவிருப்பது போன்று அழைப்பிதழை வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினர்.

சிம்பு- நயன்தாரா

சிம்பு- நயன்தாரா

அதேப்போல், சமீபத்தில் இது நம்ம ஆளு படத்திலும் சிம்பு- நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டியது போன்று ஒரு பப்ளிசிட்டியை முடுக்கி விட்டார் பாண்டிராஜ். அதேபோல பார்த்தீபன் தன்னுடைய படத்திலும் திருமணக்காட்சியை வைத்து விளம்பரப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X