அப்படியெல்லாம் எங்கேயும் போக முடியாது.. லாக்டவுன்ல இருக்கோம்.. அமலா பாலை கலாய்த்த ரசிகர்கள்!
சென்னை: சமூக வலைதளங்களில் தொடர்ந்து தத்துவமாக பொழிந்து வருகிறார் நடிகை அமலா பால். அவருக்கு என்ன ஆச்சு என்றும், அவரது பதிவுகளை ட்ரோல் செய்தும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
சமீபத்தில் பிரசவ வலியால் பெண் கஷ்டப்படுகிறாள் என்றும், ஆண்களுக்கு எந்தவொரு கஷ்டமும் இல்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டு, மீண்டுமொரு கேப்ஷன் கொடுக்க ரசிகர்கள் அதனையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

மனம் போன போக்கில்
இதயம் சொல்வதை கேட்டு அதன் வழியே செல்ல வேண்டும் என தனது ஆத்மா கூத்தாடுவதாக நடிகை அமலா பால், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். கவர்ச்சியாக உடையணிந்து நாற்காலியில் அமர்ந்தவாறு மந்திர புன்னகை புரிந்த படி இருக்கும் அந்த புகைப்படத்தையும், கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கழுத்தில் என்ன
நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் மும்பை பாடகர் பவ்னிந்தர் சிங்குடன் நடைபெற்றதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் அமலா பால் அறிவிக்கவில்லை. இந்நிலையில், அமலா பால் கழுத்தில் இருக்கும் ஒரு கயிற்றை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். அது தாலி அல்ல என்றும், கழுத்தில் என்ன சைனைடு குப்பியா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அப்படியெல்லாம் போக முடியாது
மனசு சொல்லும் படி தான் போக போவதாக நடிகை அமலா பால் பதிவிட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் போட்டு இருக்காங்க, அப்படியெல்லாம் எங்கேயும் போக முடியாது என சில குறும்புக்கார நெட்டிசன்கள் அமலா பாலை கலாய்த்து வருகின்றனர்.

சாக்லேட் பியூட்டி
அமலா பாலின் தீவிர ரசிகர்கள், அறிவு சொல்வதை கேட்க வேண்டாம், உங்க மனசு சொல்லும் படியே கேட்டு நடங்க என அமலா பாலுக்கு ஆதரவாகவும் பதிவுகளை இட்டு வருகின்றனர். மேலும், சிலர், இந்த ஸ்ட்ராப்லெஸ் உடையில் செம அழகா இருக்கீங்க என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அமலா பால் நீங்க சாக்லேட் பியூட்டி என இந்த ரசிகரும் வர்ணித்துள்ளார்.

கடவுள் காப்பாற்றுவார்
கொரோனா வைரஸிடம் இருந்தும், இந்த லாக்டவுன் துயரத்தில் இருந்தும் மக்களை எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவார் என நடிகை அமலா பால் மற்றொரு பதிவையும் பதிவிட்டுள்ளார். சர்ச் பேக்ரவுண்டில் அமலா பால் எடுத்த செல்ஃபியை பகிர்ந்து இந்த கேப்ஷனை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











