விஜய்யை வைத்து இந்த மாதிரி படம்தான் தயாரிக்கணும்.. அமலா பாலின் வேற லெவல் ஆசை!
சென்னை : நடிகை அமலாபால் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர்.
தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடாவர் படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ளது.
இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.

நடிகை அமலா பால்
நடிகை அமலா பால் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர். முதல் படமான சிந்து சமவெளி படத்திலேயே அதிரடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஆடை படத்திலும் ஆடை இல்லாமல் ஒரு இரவு முழுவதும் படும் அவதியை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

கடாவர் படத்தில் அமலா பால்
இந்நிலையில் அமலா பால் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கடாவர். இந்தப் படம் வரும் 12ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மலையாள இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் லீட் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார்.

படத்தயாரிப்பில் அமலா பால்
இந்தப் படத்தில் அமலா பாலுடன் ஹரீஷ் உத்தமன், முனீஷ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெயராவ் மற்றும் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை அமலா பால் முதல் முறையாக தயாரிக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி சிறப்பான கவனத்தைப் பெற்றுள்ளது.

விசாரணையில் அமலா பால்
கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் குழுவைக் கொண்டு விசாரிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் எப்படி கண்டறிகிறார் என்பதாக கடாவர் படத்தன் கதை செல்கிறது.

கிராவிட்டி போன்ற படத்தில் விஜய்யை தயாரிக்கணும்
இந்நிலையில் இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ஓடிடியில் ரிலீசாக உள்ளதையடுத்து படத்திற்கான பிரமோஷன்களில் அமலா பால் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் விஜய்யை வைத்து படம் தயாரித்தால் அது கண்டிப்பாக கிராவிட்டி என்ற ஹாலிவுட் படம் போல பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைவா படத்தில் ஆக்சிடெண்ட்
இதன்மூலம் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் ரசிகர்களுக்கு கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்துள்ளார் அமலா பால். அந்தப் படத்தில் இருவரும் இணைந்து சிறப்பான நடனங்களை கொடுத்திருப்பார்கள். அந்த வகையில் ரோப் வைத்து ஆடும் நடனம் ஒன்றில் தான் கீழே விழுந்து ஆக்சிடெண்ட் ஆனதையும் அமலா பால் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

7 ஆஸ்கார் வென்ற கிராவிட்டி
கடந்த 2013ல் வெளியான கிராவிட்டி படம் 7 ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற படம். நடிகை சாண்ட்ரா புல்லக், ஜார்ஜ் குளூனி லீட் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் அல்போன்சா கவுரானால் இயக்கப்பட்டது. விண்வெளியில் விபத்துக்குள்ளாகும் இவர்கள் இருவரும் எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.


Click it and Unblock the Notifications











