Amala Paul Wedding: கோலாகலமாக நடந்துமுடிந்த அமலா பால் 2வது திருமணம்... வெளியான புகைப்படங்கள்!

கொச்சி: மைனா திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.

விஜய், விக்ரம், ஆர்யா, தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இயக்குநர் AL விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் தனது நண்பரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Amala Paul Wedding: Amala Paul marries boyfriend Jagat Desai; Photos trending

அமலா பால் இரண்டாவது திருமணம்
மலையாளத்தில் 'நீலத்தாமரா' என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து அதிரடி காட்டினார். அதன் பின்னர் அவர் நடித்திருந்த மைனா திரைப்படம் அமலா பாலை ரொம்பவே பிரபலமாக்கியது. தனது கண்களால் ரசிகர்களை கிறங்கடித்த அமலா பால், கோலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய்யுடன் தலைவா, விக்ரமுடன் தெய்வத் திருமகள், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, ஆர்யாவுடன் வேட்டை, சூர்யாவுடன் பசங்க 2 என படங்களில் நடித்திருந்தார். பின்னர் மார்க்கெட் வேல்யூ குறைந்த போது, ஆடை படத்தில் நிர்வாணமாகவும் நடித்து அதிரடி காட்டினார். இதனிடையே இயக்குநர் எ.ஏல் விஜய்யை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமலா பால், 2017ல் அவரை விவாகரத்து செய்துவிட்டு சிங்கிளாக சிறகடித்து வந்தார்.

விவாகரத்துக்குப் பின்னர் கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த அமலா பால், தற்போது தனது நண்பரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். கடந்த மாதம் 26ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார் அமலா பால். அப்போது அவரது நெருங்கிய நண்பரான ஜகத் தேசாய், அமலா பாலிடம் தனது காதலை தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத அமலா பால், நண்பரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து இருவரும் ஜோடியாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரமில் ஷேர் செய்துள்ளனர்.

Amala Paul Wedding: Amala Paul marries boyfriend Jagat Desai; Photos trending

"இரண்டு ஆன்மாக்கள், ஒரே பயணம்.." என ரைம்மிங்காக அமலா பாலுடன் திருமணம் ஆனதை இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார் ஜகத் தேசாய். இதனையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அமலா பாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அமலா பாலின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X