பிக் பாஸ் சீசன் 6 வீட்டுக்கு போட்டியாளரா வராங்களா அமலா பால்? பரபரக்கும் தகவல்.. நம்பலாமா?
சென்னை: நடிகை அமலா பால் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு வரப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில், நடிகை ஓவியா பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. அதே போல நடிகை அமலா பாலும் முயற்சிக்கப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பிக் பாஸ் 6 ஆரம்பமாக போகுது
வரும் அக்டோபர் 2ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காடுன்னு ஒன்னு இருந்தா சிங்கம், புலி, நரி, மான் என அனைத்தும் இருக்கும் என கமல் பேசிய அட்டகாச புரமோ வீடியோ வெளியாகி வேறலெவலில் டிரெண்டானது. பிக் பாஸ் சீசன் 6க்கான புதிய கண் லோகோ மற்றும் போட்டி விதிமுறைகள் என பல விஷயங்களை விஜய் டிவி ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வருகிறது.

அமலா பால் வராங்களா
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் அமலா பால் தயாரித்து நடித்த கடாவர் திரைப்படம் வெளியானது. அதனை புரமோட் செய்யும் விதமாக நடிகை அமலா பால் கடந்த சீசன் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனின் புதிய ரியாலிட்டி ஷோவான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் அமலா பால் போட்டியாளராக பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓவியாவே திரும்ப வரல
பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியா மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே இல்லை. இந்நிலையில், அமலா பால் கலந்து கொள்ளப் போவதாக சொல்வது வெறும் வதந்தி தான் என்கிற பேச்சுக்களும் கிளம்பி உள்ளன.

பாலாஜி மோகன் இயக்கத்தில்
இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த் உடன் நடிகை அமலா பால் இணைந்து நடித்திருந்தார். மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிகை அமலா பால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவர் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

டிஆர்பிக்கு பஞ்சமிருக்காது
ஆனால், ஒரு வேளை நடிகை அமலா பால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சர்ச்சைக்கும் டிஆர்பிக்கும் பஞ்சமே இருக்காது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இயக்குநர் ஏ.எல். விஜய்யுடன் நடந்த விவாகரத்து, ஆடை படத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகள் பறிபோன சர்ச்சை, இரண்டாம் திருமண சர்ச்சை என ஏகப்பட்ட விஷயங்களை அமலா பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மனம் திறந்து பேசுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











