அஞ்சலின்னாங்க, ஸ்ரேயான்னாங்க, இப்ப அமலாபாலும் இல்லை.. அந்த சீனியர் ஹீரோவுக்கு யார்தான் ஹீரோயின்?
ஐதராபாத்: அந்த சீனியர் ஹீரோ ஜோடியாக நடிகை அமலா பாலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சினிமாவில் சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயின் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. குறிப்பாக தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களுக்கு இந்த சிக்கல் தொடர்கிறது.
சிரஞ்சீவி நடிக்கும் படத்துக்கும் இந்த சிக்கல் இருந்தது. பிறகு அவர் மகன் ராம் சரண் சொன்னதை அடுத்து காஜல் அகர்வால் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா
இதே போல தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான பாலகிருஷ்ணாவுக்கும் ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகன் இவர். பட வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகைகள் கூட இவருக்கு ஜோடியாக நடிக்க தயங்குகின்றனர்.

லாக்டவுனுக்கு முன்
சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் ஹீரோக்கள் நடிக்க அழைக்க மாட்டார்கள் என்பது நடிகைகளின் தயக்கத்துக்கு காரணம். இந்நிலையில், பாலகிருஷ்ணா அடுத்து நடிக்கும் படத்தை போயபதி ஶ்ரீனு இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்தப் படம் லாக்டவுனுக்கு முன்பே தொடங்கி இருக்க வேண்டும்.

கேத்தரின் தெரசா
ஹீரோயின் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் படம் தொடங்கவில்லை. முதலில் கேத்தரின் தெரசாவை கேட்டனர். அவர் அதிக சம்பளம் கேட்டு தவிர்த்தார். அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை கேட்டனர். அவர் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். பின்னர் ஸ்ரேயா நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் புதிதாக இவர்கள் லிஸ்ட்டில் அமலா பால் சேர்ந்தார்.
Recommended Video

அமலா பாலும் இல்லை
அவர் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இது பற்றி தெலுங்கு மீடியாவில் செய்திகளும் வெளியாயின. ஆனால், இப்போது அமலா பாலும் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி படக்குழு கூறும்போது பாலகிருஷ்ணா ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். ஷூட்டிங், ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











