“அந்த நினைவுகளை என் மூளையில் இருந்து நீக்க வேண்டுமே”.. அமலாபால் உருக்கமான பதிவு !
லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு வெப் சீரிஸின் படப்பிடிப்பில் நடிகை அமலா பால் கலந்து கொண்டுள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கு லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை அமலா பால் பகிர்ந்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் ஆப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்தி வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரிஸ். நான்கு கதைகளாக விரியும் இத்தொடரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.
மனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். இத்தொடரில் தான் கியாரா அத்வானி, 'சுய இன்பம்' அனுபவிக்கும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

அமலா பாலின் லஸ்ட் ஸ்டோரிஸ்
தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் தொடர் தெலுங்கில் உருவாகிறது. இதில் ஒரு கதையில் அமலா பால் நடிக்கிறார். இந்த கதையை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா இத்தொடரை தயாரிக்கிறார்.

ராதிகா ஆப்தே ரோல்
அமலா பால் இதில் ராதிகா ஆப்தே நடித்த கதையில் நடித்து முடித்துள்ளார். கடந்த பத்து நாட்களாக படப்பிடிப்பில் கலந்துகொண்ட அமலா பால், அதன் அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடுமையான பயணம்
அதில் , "தருணங்கள் பிறக்கும், மறையும். ஒரு புதிய அனுபவத்துக்காக, சில பழைய அனுபவங்களை தொலைக்க வேண்டும். தெலுங்கு ஆந்தாலஜி படப்பிடிப்பு முடிந்தது. இப்போது அந்த கதையை எனது தலையில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும். கடந்த 10 நாட்களாக உண்மையில் ஒரு கடுமையான பயணம். ஆனால் அதை மிகவும் எளிதானதாகவும், அற்புதமானதாகவும் மாற்றிவிட்டார் இயக்குனர் நந்தினி. இதனை பார்க்க ஆவலாக இருக்கிறேன்", என அமலா பால் தெரிவித்துள்ளார்.
மற்ற மூன்று கதைகள்
நான்கு கதைகளை கொண்ட இந்த வெப் சீரிஸில் ஒரு கதை மட்டும் தான் படமாக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று கதைகளில் நடிப்பவர்கள் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாம். இந்த கதைகளை சந்தீப் வங்கா, தருண் பாஸ்கர், சங்கல்ப் ரெட்டி ஆகியோர் இயக்க உள்ளனர். இந்த கதைகள் அனைத்து ஸ்கிரிப்ட் நிலையில் தான் உள்ளது. ஸ்கிரிப்ட் பணி முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











