தனுஷ் பார்க்கத்தான் ஒல்லி.. அவ்வளவு சாப்பிடுவார்.. அமலா பால் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி நடக்கிறது.சேகர் கம்முல்லா இயக்கியிருக்கும் அப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா என பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில்தான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தனுஷ் குறித்து அமலா பால் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக அவரே இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படமும் வெளிவரவுள்ளது. இவை தவிர்த்து ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் நடித்துவரும் தனுஷ், மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி: இதற்கிடையே தனுஷின் கரியரில் அவரது 25ஆவது படமான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ்தான் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இசையமைக்க தனுஷே தயாரித்திருந்த அப்படத்தில் அமலா பால், சரண்யா, சமுத்திரகனி, விவேக் என பலர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Amala Paul s comments about Dhanush are trending on social media
Photo Credit:

தனுஷுக்கும் நல்ல பெயர்: அப்படம் பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி தனுஷின் நடிப்புக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது. வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் எப்படியெல்லாம் நடந்துகொள்வாரோ அப்படியும்; தாயை இழந்த மகன் எப்படி இருப்பாரோ அப்படியும் என ஒவ்வொரு சீனிலும் தனது கிளாஸ் நடிப்பால் மாஸ் காண்பித்து அப்ளாஸை அள்ளினார். இன்றுவரை பலரது ஃபேவரைட் படமாக அது திகழ்கிறது.

அமலா பால் பேட்டி: இந்நிலையில் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அமலா பால். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அப்படத்தில் நடித்தபோது கேரவனில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம். தனுஷை பொறுத்தவரை அவர் பார்க்கத்தான் ஒல்லியாக இருக்கிறார். ஆனால் சாப்பாடு நிறையவே சாப்பிடுவார்.

அதற்கு மட்டும் ஆசை: அவர் முழுக்க முழுக்க சைவ உணவு சாப்பிடுபவர். அதேசமயம் முட்டை மட்டும் அசைவத்தில் விரும்பி சாப்பிடுவார். அதேபோல் சாப்பிடும்போது அவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது கவுண்டமணியின் பெரிய ரசிகர் தனுஷ். எனவே அவர் சாப்பிடும்போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி சாரின் காமெடியை போட்டுவிடுவார். அதை பார்த்துக்கொண்டேதான் அவர் சாப்பிடுவார்" என்றார். அமலா பாலின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

அமலா பயணம்: முன்னதாக அமலா பால் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். முதலில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; திடீரென விவாகரத்து பெற்றார். அடுத்ததாக ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இலை என்கிற மகன் இருக்கிறார். இப்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். சினிமாவில் தொடர்ந்து நடிப்பது பற்றி அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X