ரஜினிக்கு அமலா விட்ட சவால்! - ஒரு ஃப்ளாஷ்பேக்
22 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் அமலாவைச் சுற்றிச் சுற்றி வருகின்றன ஊடகக் கண்கள். அவரும் வஞ்சனையின்றி பேட்டிகளும் போட்டோக்களும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
அப்படிக் கொடுத்த ஒரு பேட்டியில், வேதம் புதிது படத்தின் போது, அவர் நடிகர் ரஜினியிடம் போட்ட ஒரு சவாலை நினைவு கூர்ந்துள்ளார்.

இதோ அமலாவின் ஃப்ளாஷ்பேக்...
"வேலைக்காரனுக்காக ரஜினியுடன் காஷ்மீர் போயிருந்தேன். அவரோட நடிச்ச முதல் படம் அது. ஷூட்டிங்கப்போ என்னோட பர்சனல் லைப் பத்தி கேட்டவர், தன்னோட வாழ்க்கைல நடந்ததையெல்லாம் சொன்னார்.

அடுத்தடுத்து..
யதேச்சையா நடந்ததா தெரியவில்லை... அடுத்தடுத்து கொடி பறக்குது, மாப்பிள்ளை என அடுத்தடுத்து அவர் கூட அடுத்தடுத்து நடிச்சேன்.

வேதம் புதிது ஷூட்டிங்கில்
ஒரு முறை வேதம் புதிது ஷூட்டிங்கில் இருந்தேன். எங்க ஷூட்டிங் நடந்துக்கிட்டிருந்த மைசூர்ல இன்னொரு இடத்துல ரஜினியோட ஊர்க்காவலன் ஷூட்டிங். அதுக்கு வந்த ரஜினி, எங்க ஷூட்டிங் பத்தி கேள்விப்பட்டு, எங்க இடத்துக்கு வந்தார்.

செல்லச் சண்டை
அப்ப ரஜினியும் சத்தியராஜும் நான் விலங்குகள் மீது காட்டற அன்பைப் பத்தி ஜாலியாவும் சீரியஸாவும் கமெண்ட் பண்ணாங்க. அப்ப ரஜினிகிட்ட 'என்னை மாதிரியே உங்களையும் மாத்தறேன் பாருங்க'ன்னு செல்லமா சண்டை போட்டேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











