வெறும் 30 செகண்டுக்கு 2 லட்சமா?.. அமலா ஷாஜி தான் இப்படி கேட்கிறாங்கனு பேசிய ஹீரோ
சென்னை: விஜய் ஆண்டனி இசையில் வெளியான பல ஹிட் பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதிய பிரியன் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ள அரணம் படம் விரைவில் வெளியாகிறது. சமீபத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மேடை ஏறி பேசிய பிரியன் அமலா ஷாஜி கேட்கும் தொகை குறித்து வெளிப்படையாக பேசியது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சுமார் 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் வெறும் ரீல்ஸ் போட்டே சேர்த்து இருக்கிறார் அமலா ஷாஜி. ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு அவர் நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ வேறலெவல் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
நடனப்புயல் அமலா ஷாஜி: இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடி வீடியோக்களை வெளியிடுவது, வித்தியாசமான முக பாவணைகளை காட்டி ரீல்ஸ் போடுவது, போல்டான போட்டோஷூட் நடத்துவது என எக்கச்சக்க ரசிகர்களை ஃபாலோயர்களாக வைத்திருக்கிறார் அமலா ஷாஜி. இந்நிலையில், சமீபத்தில் சினிமா விழாவில் அவர் குறித்து இயக்குநரும் நடிகருமான பிரியன் பேசியது பஞ்சாயத்தாகி உள்ளது.

ஹீரோவான பாடலாசிரியர்: காமெடி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் ஹீரோவாகி வரும் நிலையில் பா. விஜய் உள்ளிட்ட சில பாடலாசிரியர்கள் ஹீரோக்களாகவும் மாறி வருகின்றனர். அந்த வகையில், விஜய் ஆண்டனி இசையில் மக்காயல, மஸ்காரா போட்டு மயக்குறியே, வேலாயுதம் இன்ட்ரோ பாடல் என பல ஹிட் பாடல்களை எழுதிய பிரியன் அரணம் படத்தை எழுதி, இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய வீடியோவை ஷேர் செய்து விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
30 செகண்ட்டுக்கு 2 லட்சம்: மேடையில் பிரியன் பேசும் போது தன்னுடைய படத்தின் மேடை என ரொம்பவே வெளிப்படையாக இந்த மேட்டைரை பேசியுள்ளார். 2 நிமிஷ பாடலுக்கு நடனமாட சென்னையில் ஒரு பொண்ணு 50 ஆயிரம் கேட்குது என்றும் வெறும் 30 செகண்ட் நடனமாட கேரளா பொண்ணு 2 லட்சம் மற்றும் ஃபிளைட் டிக்கெட் எல்லாம் கேட்குது என பிரியன் பேசியுள்ளார். மேலும், நானே, ஃபிளைட்ல போனது இல்லையேம்மா என அவர் பேசும் போது, அந்த பெண்ணின் பெயரை சொல்லச் சொல்லி திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி சொல்ல, வேற யாரு நம்ம அமலா ஷாஜி தான் என பிரியன் பேசியுள்ளார்.
பிரசாந்த் ரங்கசாமி விளாசல்: அமலா ஷாஜி அவங்களோட ஹார்ட் வொர்க் காரணமாக பல மில்லியன் ஃபாலோயர்களை கவர்ந்துள்ளனர். நீங்க அவங்களை தேடி போனதே உங்க படத்துக்கான பப்ளிசிட்டிக்காகத் தான். உங்களால அவங்க கேட்ட சம்பளத்தை கொடுக்க முடிந்தால் அவங்களை புக் பண்ணுங்க, இல்லைன்னா விடுங்க.. இப்படி வெளிப்படையா மென்ஷன் பண்ணனும்னு என்ன அவசியம் இருக்கு என பிரசாந்த் ரங்கசாமி கொந்தளித்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஹார்ட் வொர்க்கா?: மேலும் சில நெட்டிசன்கள் அமலா ஷாஜி ஹார்ட் வொர்க்கா என்ன ப்ரோ காமெடி பண்றீங்க என பிரசாந்த் ரங்கசாமியை கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். சில முன்னணி நடிகைகள் குத்தாட்டம் போடுவதற்கு பல கோடிகள் வாங்கி வரும் நிலையில், அமலா ஷாஜி நடனமாட 2 லட்சம் கூட தர முடியாதா? பிறகு ஏன் படம் எடுக்க வரீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு விளாசி வருகின்றனர்


Click it and Unblock the Notifications











