எல்லா சைடுலையும் பணம் கொட்டுது.. புதிய கார் வாங்கிய அமலா ஷாஜி.. குவியும் மோசமான கமெண்ட்ஸ்!

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த டிக் டாக் பிரபலமான அமலா ஷாஜி இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கி 4.4 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி வைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் ஒரு விளம்பர போஸ்ட்டுக்கு அவருக்கு பல லட்சம் வருமானம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

சமீபத்தில், 5 ஆயிரம் கொடுத்தால் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம் என ஆசைக்காட்டி பலரை ஏமாற்றினார் அமலா ஷாஜி என அவர் மீது புகார்கள் குவிந்தன. ஆனால், அதன் பின்னர் அமலா ஷாஜியே அந்த வலையில் ஏமாந்துள்ளதாக கூறி அவரை சேஃப் செய்து விட்டனர்.

Amala Shaji instagram car

யூடியூபர் டிடிஎஃப் வாசன் போலவே அமலா ஷாஜிக்கும் ஏகப்பட்ட ரசிகர்களும் அதைவிட அதிகமாக ஹேட்டர்களும் உள்ள நிலையில், புதிதாக தற்போது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார் அமலா ஷாஜி.

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர்: இன்ஸ்டாகிராமில் குட்டி இளவரசியாகவே சுமார் 44 லட்சம் ரசிகர்களை கொண்டு வலம் வருகிறார் அமலா ஷாஜி. கண்டபடி குத்தாட்டம் போடும் வீடியோக்கள், கவர்ச்சிகரமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்துவது என டிரெண்டாகி வரும் அமலா ஷாஜி சினிமாவில் நடிக்க தீவிர முயற்சிகளையும் செய்து வருகிறார்.

டான்ஸ் ரீல்ஸ்: ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடலுக்கு படுகவர்ச்சியாக உடையணிந்து கொண்டு இவர் வெளியிட்ட ரீல்ஸுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்தன. மேலும், கேரளா சேச்சியான அமலா ஷாஜி உடை மாற்றும் வீடியோக்கள், மொட்டை மாடி போட்டோஷூட் என நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மோசடி குற்றச்சாட்டு: இளைஞர்களின் பேராசையை குறி வைத்து குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரப்படுத்தி காசு வந்ததும் அந்த கனெக்‌ஷனில் குறை ஏற்பட்டுள்ளதாக கூறி காசு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக புகார்கள் கிளம்பின. மோசடி குற்றச்சாட்டுக்குப் பிறகு அமலா ஷாஜிக்கு சில ஃபாலோயர்கள் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.

புது கார் வாங்கிட்டாரு: சமீபத்தில் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த அமலா ஷாஜி தற்போது ஹுண்டாய் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த பிரம்மாண்ட காருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மோசமான கமெண்ட்ஸ்: அமலா ஷாஜி பலரை ஏமாற்றி சம்பாதித்த காசுல தான் இவ்ளோ பெரிய கார் வாங்கி உள்ளார் என சில நெட்டிசன்கள் படுமோசமாக அவர் குறித்து ஆபாச வார்த்தைகளில் கமெண்ட் போட்டு வருகின்றனர். அமலா ஷாஜியின் ரசிகர்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு, சூப்பர் செல்லம் என வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X