Amala Shaji scam: 15 ஆயிரம் கொடு 55 ஆயிரம் தருகிறேன்.. அமலா ஷாஜி செய்த மோசடி? கதறும் இளைஞர்!

சென்னை: டிக்டாக்கில் பிரபலமான அமலா ஷாஜி இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார். ரீல்ஸ் போட்டே சோஷியல் மீடியா செலிபிரிட்டியாக மாறி வரும் அமலா ஷாஜி சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்றும் இவரது பெயர் அடிபட்டது. இந்நிலையில், ஐடி ஊழியர் ஒருவர் இவர் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.

ஒரு மணி நேரத்தில் குறைந்த தொகை கொடுத்தால் பல மடங்கு அதிகரித்து தருகிறேன் எனக் கூறி அமலா ஷாஜி மோசடியில் ஈடுபட்டார் என இளைஞர் ஒருவர் அளித்த பேட்டி பகீர் கிளப்பி உள்ளது.

Amala Shaji latest money scam exposed by Advocate Vignesh Muthukumar

அமலா ஷாஜி: இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா போட்ட காவாலா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வெளியிட்டு ஏகப்பட்ட வியூஸ்களை அள்ளி உள்ளார் அமலா ஷாஜி. டிக்டாக் மூலம் பிரபலமான இவர் கேரளாவை சேர்ந்தவர். 4.1 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். யூடியூப் சேனல், வாட்ஸ் அப் சேனல் என படு பிசியாக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

15 ஆயிரம் கொடு 55 ஆயிரம் தருகிறேன்: ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் கொடுத்தால் 1000 ரூபாய் தருகிறேன் என்றும் 15 ஆயிரம் கொடுத்தால் 55 ஆயிரமாக தருகிறேன் என Crypto World மற்றும் Ananya Forex என புதுசு புதுசா பணத்தை பல மடங்கு ஆக்கித் தருகிறேன் என ஆசைக் காட்டி மோசம் செய்து விட்டார் அமலா ஷாஜி என Advocate Vignesh Muthukumar யூடியூப் சேனலில் அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் விக்னேஷ் முத்துகுமார் தன்னுடைய யூடியூப் சேனலில் அந்த இளைஞரின் வாக்குமூலத்தை அப்படியே வீடியோவாக வெளியிட்டார். ஆனால், அந்த இளைஞர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவரது முகத்தை காட்டவில்லை.

Amala Shaji latest money scam exposed by Advocate Vignesh Muthukumar

அமலா ஷாஜி கைதாவாரா?: அமலா ஷாஜி பணத்தை வாங்கிக் கொண்டு எந்தவொரு ரெஸ்பான்ஸும் செய்யவில்லை என்றும் மேலும், மேலும் டெக்னிக்கல் கோளாறு என தன்னிடம் பணத்தை பிடுங்கவே பார்த்தார் என்றும் அந்த இளைஞர் புலம்பித் தீர்த்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அமலா ஷாஜியிடம் போலீஸார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல இன்ஸ்டாகிராம் நடிகைகள் அந்த சோப்பு வாங்குங்க, இந்த க்ரீம் வாங்குங்க நான் கியாரண்டி என விளம்பர மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில், அமலா ஷாஜி பண மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் விளக்கம் கொடுப்பாரா? அல்லது விசாரணையில் என்ன என்ன விஷயங்கள் வெளியே வரப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உஷாரா இருங்க இளைஞர்களே: ஐடியில் வேலை பார்த்து அதிகம் சம்பாதிப்பவர்களுக்கே பணத்தின் தேவை அதிகரித்து வருவதால் ஆன்லைனில் வேலை தேடுகிறேன் என பல மோசடி வலைகளில் சிக்கி விடுகின்றனர். இன்ஸ்டாகிராம் பேஜுக்கு லைக் போட்டால் போதும் 250 ரூபாய் உடனடி கிரெடிட் என சின்ன மீனை போட்டு உங்களிடம் உள்ள பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொள்ளும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. உழைத்து சாப்பிட்டால் தான் உடம்பில் ஒட்டும் என்பது பழமொழி அல்ல உண்மையான ஒன்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X