அடக் கருமமே.. ஹாஃப் சாரி கட்டுறதையெல்லாம் கொஞ்சமும் கூச்சமில்லாமல் அப்படியே காட்டுறாரே அமலா ஷாஜி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்களை தனது ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் கவர்ந்துள்ள அமலா ஷாஜி புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் ஹாஃப் சாரி கட்டுவதையே அப்படியே காட்டியபடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக 4.1 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள அமலா ஷாஜி நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டாகி வருகிறார்.

அவர் செய்யும் செடக்டிவ் மேனரிஸத்தை பார்த்தே கிறங்கிப் போகும் ரசிகர்கள் அவருக்கு ஃபேனாக மாறி உள்ளனர்.
இன்ஸ்டா இளவரசி: இன்ஸ்டாகிராமில் குட்டி இளவரசியாகவே சுமார் 41 லட்சம் ரசிகர்களை கொண்டு வலம் வருகிறார் அமலா ஷாஜி. கண்டபடி குத்தாட்டம் போடும் வீடியோக்கள், கவர்ச்சிகரமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்துவது என டிரெண்டாகி வரும் அமலா ஷாஜி சினிமாவில் நடிக்க தீவிர முயற்சிகளையும் செய்து வருகிறார்.

தாவணி அணியும் வீடியோ: சமீபத்தில், ஜெயிலர் படத்தின் ரிலீஸை முன்னிட்டு அமலா ஷாஜி நடனமாடிய காவாலா வீடியோ வேறலெவலில் டிரெண்டான நிலையில், தற்போது பாவாடை தாவணி அணியும் வீடியோவை கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், ஒவ்வொரு போர்ஷனாக வெளியிட்டு ஜாக்கெட் அணிவது, பாவாடை அணிவது, தாவணி போடுவது என அனைத்தையும் அப்படியே காட்டி இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.
மண்டை மேல என்ன கொண்டை: மேலும், உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடுவது முதல் மூஞ்சிக்கு மேக்கப் போடுவது வரை என அனைத்தையும் வீடியோவில் வெளியிட்டு வரும் அமலா ஷாஜியின் மண்டை மேல் உள்ள அந்த கொண்டையை பார்த்த ரசிகர்கள் அதை வைத்து கிண்டலடித்து சிரித்து வருகின்றனர்.
செம குத்தாட்டம்: துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிங் ஆஃப் கொத்தா படம் ஓடவே இல்லை என்றாலும், அந்த படத்தில் ரித்திகா சிங் நடனம் ஆடிய கலாபக்காரா ஐட்டம் சாங் வேற லெவலில் ரீச் ஆகி விட்டது.
அந்த பாடலுக்கும் தற்போது தாறுமாறாக ஒரு குத்தாட்டத்தை போட்டு இளசுகளை ஈர்த்து வருகிறார் அமலா ஷாஜி. அவரது வீடியோவை பார்த்து ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் ஒரு பக்கம் குவிந்து வந்தாலும், டபுள் மீனிங் கமெண்ட்டுகள் தான் வழக்கம் போல கமெண்ட் செக்ஷனையே ஆக்கிரமித்துள்ளன.


Click it and Unblock the Notifications











