பட்டுப்புடவையில் பளபளக்குறாங்களே.. ஓரக்கண்ணால ஓரங்கட்டும் அமலா சாஜி.. லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ செம!

சென்னை: உதயம் என்எச் 4 படத்தில் கானா பாலா பாடிய "ஓரக்கண்ணால என்ன ஓரங்கட்டுறா" பாடலுக்கு அமலா சாஜி பட்டுச்சேலை கட்டி பவ்யமாக போட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பியூட்டியான அமலா சாஜிக்கு 4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். குறும்புத்தனமாகவும் கவர்ச்சி மிகுதியாகவும் இவர் வெளியிடும் வீடியோக்கள் இளைஞர்களை இரவில் தூங்க விடாமல் செய்து வருகிறது.

Amala Shaji stuns in pattu saree and grooves for Orakkannala song grabs fans attention

சமீபத்தில் தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக காவாலா பாட்டுக்கு ஆட்டம் போட்டு அனலை கிளப்பிய அமலா சாஜி இப்போ லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ லைக்குகளை அள்ளி வருகிறது.

பட்டுப்புடவையில் அமலா சாஜி: கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வந்த அமலா சாஜி அழகாக பட்டுப்புடவையை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படங்களும் அதே உடையில் அவர் போட்டுள்ள நடன வீடியோவும் இன்ஸ்டாகிராமில் செம டிரெண்டாகி வருகிறது.

Amala Shaji stuns in pattu saree and grooves for Orakkannala song grabs fans attention

பட்டுச்சேலையை கட்டிக் கொண்டு லேசான இடுப்பழகை காட்டி அமலா சாஜி தனது வசீகரமான ஃபேஸ் எக்ஸ்பிரஷன்களை காட்டி இளைஞர்களை அதிகப்படியாக ஈர்த்து வருகிறார்.

தமன்னாவுக்கே டஃப்: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் வெளியான நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த பாடலுக்கு நடனமாடி ரீல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால், தமனனாவுக்கே டஃப் கொடுக்கும் விதமாக அவரை போலவே சுருட்டை முடி, டிரெஸ் எல்லாம் போட்டுக் கொண்டு ஆட்டம் போட்டது அமலா சாஜி தான். அவரது வீடியோ வேறலெவலில் ரீச்சானது.

ஓரக்கண்ணால ஓரங்கட்டுறா: இந்நிலையில், தற்போது சித்தார்த் நடித்த உதயம் என்.எச் 4 படத்தில் கானா பாலா குரலில் இடம்பெற்ற "ஓரக்கண்ணால ஓரங்கட்டுறா" பாடலை லேடி வாய்ஸில் மிக்ஸ் செய்து அதற்கு ஆட்டம் போட்டிருக்கிறார் அமலா சாஜி.

கையில் வாடிப்போன மல்லிகைப்பூவையும் வைத்துக் கொண்டு மிட் நைட்டில் இப்படியொரு டான்ஸ் போடுறீயேம்மா, யாரும்மா நீ என ரசிகர்கள் வழக்கம் போல அமலா சாஜியை கிண்டல் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X