twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலீஸ் விசாரணைக்கு ஆஜரான அமலாபால்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    அமலாபால் மீதான விசாரணையைத் தொடர் நீதிமன்றத்தில் இனி..!!

    புதுச்சேரி: நடிகை அமலாபால் புதுச்சேரியில் வசிப்பதாகப் பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிமன்றம், முதலில் அமலாபால் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில குற்றப்பிரிவு போலீஸ் முன்பு வருகிற 15-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதன்படி நேற்று திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் முன் அமலாபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அமலாபால்

    அமலாபால்

    அமலாபால், கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரியில் வரி குறைவு என்பதற்காக போலியான முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. நான் சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை என அமலா பால் விளக்கம் அளித்தார்.

     போலி ஆவணங்கள்

    போலி ஆவணங்கள்

    மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, பகத் பாசில், நடிகை அமலாபால் ஆகியோர் சொகுசு கார்களை வாங்கி, அதனை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்த வகையில் பல லட்சம் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த மூவர் மீதும் வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

    கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

    இந்த வழக்கில் நடிகர் பகத் பாசில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். சுரேஷ் கோபி கைதுக்கு தடைகோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் 3 வாரங்கள் தடை விதித்திருந்தது. அந்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    அமலா பால் மறுப்பு

    அமலா பால் மறுப்பு

    நடிகை அமலாபால் தனக்கு புதுச்சேரியில் வாடகை வீடு இருப்பதாகவும், அந்த வீட்டு முகவரியிலேயே காரை பதிவு செய்ததாவும், இதனால் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று கூறி வந்தார். போலீஸ் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார்.

    ஆஜராக வேண்டும்

    ஆஜராக வேண்டும்

    இந்த நிலையில் அமலாபால் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 15-ம் தேதி அமலாபால் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆஜரான அமலாபால்

    ஆஜரான அமலாபால்

    அதன்படி நேற்று திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் முன் அமலாபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் புதுச்சேரியில் தனக்கு வாடகை வீடு இருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததாக தெரிகிறது.

    தொடர்ந்து விசாரணை

    தொடர்ந்து விசாரணை

    அமலாபாலின் ஆவணங்களில் போலீஸாருக்கு திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் வழக்கை தொடர்ந்து நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அமலாபால் மீதான விசாரணையைத் தொடர் நீதிமன்றத்தில் அனுமதி பெற முயற்சிக்க இருக்கிறார்களாம்.

    English summary
    Actress AmalaPaul was accused of tax violation case by giving a false address to the resident of Puducherry. The court ordered AmalaPaul to appear for police enquiry on Jan 15th. Accordingly, Amalapaul appeared for police enquiry by Trivandrum Criminal Police yesterday. The police investigated her for about an hour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X