விவசாயிகளுக்காக குரல் கொடுப்பேன்.. தடை செய்தால் பாலிவுட்டே தேவையில்லை.. பிரபல நடிகை அதிரடி!
மும்பை: விவசாயிகளுக்காக குரல் கொடுத்து ட்வீட் போட்ட நடிகை அமாண்டா செர்னி, அதற்காக பாலிவுட்டில் இருந்து தன்னை தடை செய்தால், தனக்கு பாலிவுட்டே தேவையில்லை என அதிரடி காட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று மாத காலத்தை விவசாயிகள் போரட்டம் நெருங்கி வருகிறது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களும் உலகத்தின் பார்வையையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

ரிஹானாவின் ஒரு ட்வீட்
விவசாயிகள் போராட்டம் குறித்து எந்தவொரு பிரபலமும் வாய் திறக்காமல் இருந்த நிலையில், அமெரிக்க பாடகியான ரிஹானாவின் ஒரு ட்வீட் ஒட்டுமொத்த இந்திய பிரபலங்களையும் முழிக்கச் செய்தது. ஆனால், அதில் பலரும் ரிஹானாவின் கருத்துக்கு எதிராக சொல்லி வைத்தது போல ட்வீட் போட்டது தான் விசயத்தை விவகாரமாக்கியது.

ஆதரவும் எதிர்ப்பும்
மத்திய அரசால் கொண்டு வந்த புதிய வேளான் சட்டத்தை ஆதரித்தும், அதை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் வெளிநாட்டு பிரபலங்களும், இந்திய பிரபலங்களும் ட்விட்டர் சண்டை போட்டு வருகின்றனர். போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு எதிராக ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஒன்று திரண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜாக்குலின் தோழி
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸின் தோழியும், அவரை போலவே உருவ அமைப்பு கொண்ட அமெரிக்க நடிகையுமான அமண்டா செர்னி விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட ட்வீட்டுக்கு எதிராகவும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுக்கு மேல நீங்கள் பாலிவுட் பக்கம் அடியெடுத்தே வைக்க முடியாது என்றும் மிரட்டி உள்ளனர்.

பாலிவுட்டே தேவையில்லை
இணையத்தில் உங்களின் நிர்வாண போட்டோக்களை காட்டி பிழைத்துக் கொள்ளுங்கள் என கடுமையாக சில நெட்டிசன்கள் சாடிய நிலையில், மனித நேயத்தோடு விவசாயிகளின் தேவையை மதிக்க வேண்டும் என்றே அப்படியொரு ட்வீட்டை போட்டேன். அதனால், எனக்கு பாலிவுட் வாய்ப்பு பறிபோகும் என்றால், எனக்கு பாலிவுட்டே தேவையில்லை என்று காட்டமாக போட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.

செலிபிரிட்டி சண்டை
விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசுவதாக பல உள்நாட்டு, வெளிநாட்டு பிரபலங்களும் மாற்றி மாற்றி ட்விட்டர் சண்டை போட்டுக் கொண்டு, முக்கிய பிரச்சனையை திசை திருப்பி விட்டு இந்த விவகாரத்தை செலிபிரிட்டி சண்டையாக மாற்றி வருகின்றனர் என்றும் சிலர் விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கிறேன் என்கிற பேரில் புகழ் வெளிச்சம் தேடிக் கொள்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











