அமரகாவியம் நயன்தாரா காதல் கதையா? - ஆர்யா, இயக்குநர் விளக்கம்

By Shankar

அமரகாவியம் படம் நடிகை நயன்தாராவின் சொந்தக் கதை அல்ல என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்யாவும், இயக்குநர் ஜீவா சங்கரும் தெரிவித்தனர்.

நடிகர் ஆர்யா அவருடைய தம்பி சத்யாவை கதாநாயகனாக வைத்து, 'அமரகாவியம்' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இருக்கிறார். இதில், மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார்.

நயன்தாரா கதை?

நயன்தாரா கதை?

படத்தின் அறிமுக நிகழ்ச்சியில், ஆர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம், ''அமரகாவியம், நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சொந்த கதை என்று பேசப்படுகிறதே?'' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

ஜீவா சங்கர்

ஜீவா சங்கர்

'இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட ஜீவா சங்கர் பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று ஆர்யா கூறினார். அதைத்தொடர்ந்து டைரக்டர் ஜீவா சங்கர் விளக்கம் அளித்தார்.

உண்மைச் சம்பவம்

உண்மைச் சம்பவம்

அவர் கூறுகையில், "இது, நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த கதை அல்ல. என் சிறு வயதில் மனதை பாதித்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'அமரகாவியம்' படத்தின் கதையை உருவாக்கினேன்.

நயன்தாராவை பாதித்தது

நயன்தாராவை பாதித்தது

படம் பார்க்கும் எல்லோருக்கும் இந்த கதை தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் நயன்தாராவுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வருடத்தின் முக்கியமான படமாக இது இருக்கும். கதையைக் கேட்டதுமே ஆர்யா உடனடியாக தயாரிக்க முன்வந்தார்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X