Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பொண்ணுக்கு பிறந்த நாள்..தோளுக்கு மேல வளர்ந்துட்டாங்களே!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இவரது நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் படம் ரிலீஸ் ஆனது. இதையடுத்து அடுத்த வாரம் அதாவது தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. தொடர்ந்து பண்டிகை நாட்களில் படங்களை ரிலீஸ் செய்து மாஸ் ஹீரோவாக உருவெடுத்து வருகின்றார். சிவகார்த்திகேயன் தனது சொந்த அத்தை மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் குழந்தையான மகள் ஆராதனா பிறந்த நாள் வீட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் விஜய் டிவி வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு அரியாசனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி அதற்கடுத்து விஜய் டிவியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பின்னரும் இவரது வளர்ச்சி என்பது இப்போது வரை இருந்து கொண்டு உள்ளது. தொடக்கத்தில் ஜாலியான படங்களில் நடித்த அவர் அதன் பின்னர் கொஞ்சம் அதிரடியான ஆக்ஷன் படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டிக் கொண்டே வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், படத்திற்கு படம் எதாவது வித்தியாசத்தினை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றார். இவரது நடிப்பில் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள அமரன் படம் இவரது 22வது படம். இந்தப் படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஆராதனா: சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் தேதி தனது உறவினர் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தை ஆராதனா. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 22ஆம் தேதி 11வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது தனது மகள் ஆராதனாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பிரின்சஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

க்யூட்: சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியரின் மகளான ஆராதனா பார்ப்பதற்கு ஒரு சாயலில் சிவகாத்திகேயனைப் போலவும், ஒரு சாயலில் ஆர்த்தியைப் போலவும் உள்ளார். மேலும் செம அழகாகவும் க்யூட்டாகவும் உள்ள ஆரதானாவுக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆராதனா தாய் ஆர்த்தியின் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டாரே எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











