கங்குவா கல்லா கட்டுமா?.. சரியான செக் வைத்த அமரன், லக்கி பாஸ்கர்.. என்ன செய்யப்போகிறார் சூர்யா?
சென்னை: ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. சென்னையில் சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளன.
இன்று அல்லது நாளை அனைத்து இடங்களிலும் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கோட் படத்திற்கு கிடைத்தது போல பெருவாரியான தியேட்டர்கள் கங்குவா படத்துக்கு தமிழ்நாட்டில் கிடைக்குமா என்றால் அது கஷ்டம்தான் என தியேட்டர் ஓனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் என இரு படங்களும் தமிழ்நாட்டில் சக்கைப் போடு போட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு முதல் பிக்கப் ஆன இந்த இரண்டு படங்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
அமரன் 200 கோடி வசூல்: முதல் நாள் வசூலை தொடர்ந்து 200 கோடி வசூலை 10 நாட்களில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் பெற்றதை தொடர்ந்து ராஜ்கமல் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது. பாக்ஸ் ஆபிஸ் நம்பர் கேமில் சிவகார்த்திகேயனும் செம சூப்பராக என்ட்ரி கொடுத்துள்ளார். அஜித்தின் துணிவு படத்துக்குக் கூட அதிகாரப்பூர்வமாக இப்படியொரு போஸ்டர் வெளியாகவில்லையே என விஜய் ரசிகர்கள் தனியாக ட்ரோல் செய்து வருவதையும் காண முடிகிறது. அடுத்த வாரமும் சாலிடாக அமரன் தியேட்டர்களில் நின்று ஓடும் என்பதால் அந்த படத்தை தூக்க பல தியேட்டர்கள் முன் வரவில்லை என்கின்றனர்.
லக்கி பாஸ்கர்: தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் இதுவரை உலகளவில் 80 கோடி ரூபாய் வசூலை அள்ளி 100 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு தமிழ்நாட்டில் வெளியான ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் படங்கள் சொதப்பிய நிலையில், அந்த படங்களுக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களையும் லக்கி பாஸ்கர் பெற்றுள்ளது. இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படமும் அடுத்த வாரம் வரை ஓடும் என்கின்றனர்.
கங்குவா கல்லா கட்டுமா?: இந்த 2 படங்களும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், கங்குவா படத்திற்கு ஒட்டுமொத்த தியேட்டர்களும் தமிழ்நாட்டில் கிடைக்காது என்கின்றனர். அதன் காரணமாக வசூலில் பெரிதளவில் தமிழ்நாட்டில் ஓபனிங்கை கங்குவா பெறுமா? ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா அதிகளவில் தியேட்டர்களில் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட என்ன முயற்சிகளை செய்யப் போகிறார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியில் ஹிட்டானால்: அனிமல் பாபி தியோல் மற்றும் கல்கி 2898 ஏடி நடிகை திஷா பதானி இந்த படத்தில் இருக்கும் நிலையில், படம் இந்தியில் க்ளிக் ஆனால், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தும் என்றும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் படம் ஓடினால் தான் படக்குழு எதிர்பார்க்கும் பெரிய ரெக்கார்டு பிரேக்கிங் கலெக்ஷனை பெற முடியும் என்கின்றனர். சிவகார்த்திகேயனின் அமரன், ரஜினிகாந்தின் வேட்டையன் மற்றும் விஜய்யின் கோட் படத்தின் வசூலையும் கங்குவா முறியடிக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











