தீபாவளி ரேஸ்ல மட்டுமில்ல.. பிரமோஷன்லயும் போட்டிதான்.. அமரன் -பிரதர் டீம் செஞ்ச வேலை!
துபாய்: இந்த தீபாவளி பந்தயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம்ரவியின் பிரதர் மற்றும் கவினின் ப்ளடி பெக்கர் படங்கள் நேரடியாக மோதவுள்ளன. இதுமட்டுமில்லாமல் நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் இந்த தீபாவளி ரேஸில் தமிழ் படங்களுடன் மோத தயாராகவுள்ளது.
இந்த தீபாவளி பந்தயத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் பங்கேற்று உள்ளன இவற்றுடன் நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் இணைந்துள்ளது இந்த படம் ஃபேன் இந்தியா படமாக வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது இந்த படங்களின் குழுவினர் அடுத்தடுத்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றன.

தீபாவளி படங்கள்: தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பட்டாசுகள், இனிப்புகள், புது துணியுடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். தீபாவளி கொண்டாட்டம் என்றால் புது படம் இல்லாமலா தமிழில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர் என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகியுள்ளன. இதனிடையே தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படமும் தீபாவளியை ஒட்டி ரிலீசாகவுள்ளது. இந்த படங்களின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
அமரன் & பிரதர் படங்கள்: பிரதர், அமரன், ப்ளடி பெக்கர் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களும் நடந்து வருகினற்ன. மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அமரன் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ள நிலையில் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் ஜோடி மாஸ் காட்டி வருகிறது. படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதே போல ஜெயம் ரவியின் பிரதர் படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
துபாயில் பிரமோஷன்கள்: பிரதர் படத்தின் பாடல்கள் ஏராளமான ரசிகர்களை கொண்டாட செய்துள்ள நிலையில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே துபாயில் அமரன் மற்றும் பிரதற் படக்குழுவினர் அடுத்தடுத்து பிரமோஷன்களில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் துபாய் விமான நிலையத்தில் இருக்கும் படியான வீடியோக்கள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன. துபாயில் தமிழ் படங்கள் அடுத்தடுத்து சிறப்பான வரவேற்பை பெற்று வரும் நிலையில் அங்கு எப்போதுமே ப்ரோமோஷன்களில் ஈடுபட படக்குழுவினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அமரன் & பிரதர் பிரமோஷன்கள்: அந்த வகையில் தற்போது இந்த பிரதர் மற்றும் அமரன் படங்களின் ப்ரோமோஷன்களும் அங்கு நடத்தப்பட்டுள்ளன. அமரன் படத்திற்கான பிரமோஷனில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டீம் பங்கேற்ற நிலையில், அவர்களுடன் சாய் பல்லவி இணையாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. சாய் பல்லவி எங்கே என்று ரசிகர்கள் கத்தி கேட்டதை பார்க்க முடிந்தது. இதேபோல பிரதர் பட பிரமோஷனுக்காக நடிகை பிரியங்'கா மோகன் உள்ளிட்டவர்கள் துபாய் சென்றதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











