தனுஷ் மட்டுமில்லை பாஸ்.. அஜித்தையே பாக்ஸ் ஆபிஸில் ஆஃப் செய்த அமரன்.. முதல் நாள் ரெக்கார்டு!

சென்னை: கோலிவுட்டில் புதிய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். 12 வருஷத்துக்கு முன்னாடி விஜய் டிவியில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனா முதல் நாளில் 42.3 கோடி ரூபாயை உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ஈட்டியிருப்பது என இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

பிரின்ஸ், அயலான் படங்கள் பெரிதாக ஓடாத நிலையில், ட்ரோல் செய்யப்பட்டு வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் டாக்டர், டான் மோடுக்கு மாறி வசூல் வேட்டையை தொடங்கியுள்ளார். இந்த முறை 3 நாட்களில் 100 கோடி வசூலை அடிக்கப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.

amaran box office ajith kumar

தனுஷின் ராயன் படத்தின் வசூலுடன் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை ரசிகர்கள் கம்பேர் செய்து வந்த நிலையில், சில விஜய் ரசிகர்கள் அஜித்தின் கடைசி படமான துணிவு படத்தின் முதல் நாள் உலக வசூலையே அமரன் முந்திவிட்டது என பற்ற வைத்துள்ளனர்.

வெல்கம் டு பிக் லீக் சிவா: அஜித்தின் ஏகே படத்தில் புத்தகங்களை சுமந்துக் கொண்டு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த சிவகார்த்திகேயன் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சியை பார்த்து சமீபத்தில் பாராட்டிய நடிகர் அஜித் குமார் "வெல்கம் டு பிக் லீக் சிவா" என பாராட்டினார் என சமீபத்தில் நடைபெற்ற அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். அஜித் சொன்னது உண்மை தான் என்றும் அவரது கடைசி படமான துணிவு படத்தின் முதல் நாள் வசூலையே சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் முறியடித்து விட்டார் என விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வெறுப்பேற்ற ஆரம்பித்து விட்டனர்.

amaran box office ajith kumar

கெத்து தனுஷ் ஃபேன்ஸ்: பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு என்றால் அடுத்தவர்கள் அதை முறியடிக்கத்தான் என்றும் மீண்டும் தங்களுக்கு பிடித்த ஹீரோ புதிய ரெக்கார்டை வைப்பார்கள் என்கிற தெளிவு ரசிகர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தனுஷ் ரசிகர்களுக்கு அந்த தெளிவு நிறையவே உள்ளதால் தான் அடுத்து வரும் குபேரா திரைப்படம் முதல் நாளிலேயே 50 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என உறுதியாக கூறுகின்றனர்.

துணிவு முதல் நாள் வசூல்: எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்த துணிவு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 39.60 கோடி தான் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸ் தளங்கள் தெரிவித்துள்ளன என ரசிகர்கள் அதனை ஷேர் செய்து அஜித்தின் துணிவு படத்தின் முதல் நாள் வசூலையே சிவகார்த்திகேயனின் அமரன் படம் முறியடித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

amaran box office ajith kumar

50 கோடி வசூல்: ஆனால், அஜித் ரசிகர்கள் அதெல்லாம் கிடையவே கிடையாது என்றும் அஜித்தின் துணிவு திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 50 கோடிக்கும் அதிக வசூல் செய்தது என சில மீடியாக்கள் அறிவித்த வசூல் அறிக்கைகளை எடுத்துக் காட்டி வருகின்றனர். அஜித்துக்கு அடுத்த இடத்தில் தான் வசூலில் சிவகார்த்திகேயன் எனக் கூறுகின்றனர். ஆனால், அஜித்தின் துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் பார்த்த வேலை: இதுவரை கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு கூட பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்கு முதல் நாளே அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை வெளியிட்டு அவரை பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக மாற்ற முயற்சித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ஏ.ஆர். முருகதாஸ் உடன் என்பதால் அந்த படமும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X