அமரன் வெற்றி.. சிவகார்த்திகேயன் பட இயக்குநரை லாக் செய்த தனுஷ்.. அட பூஜையே போட்டாச்சு!
சென்னை: ஜூலை மாதம் தானே தனுஷ் பிறந்தநாள் இன்று அதிரடியாக தனுஷ் பட அப்டேட்கள் இப்படி குவிகிறதே ஏன் என ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு அடுத்த அடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அமரன் பட இயக்குநருடன் தனுஷ் இணையப் போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியானது.
அஜித் படம் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருவது என்ன பிரமாதம் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இயக்குநருடன் தனுஷ் கைகோர்த்துள்ளார் பாருங்கள் என ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்னும் படத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். ஆனால், அந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கொண்டாடத் தவறினர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கும் நிலைக்கு வந்த ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உடன் கிடைத்த நட்பின் காரணமாக அமரன் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக தனுஷை இயக்கப் போகிறார்.
டி 55 படபூஜை: தனுஷின் 55வது படத்தை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இன்று பூஜையும் போடப்பட்டு அதன் புகைப்படங்களையும் கோபுரம் சினிமாஸ் வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி தனது பீட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இந்தியாவிலேயே சிறந்த திறமையான நடிகர் தனுஷை அடுத்து இயக்கப்போவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஹீரோயின் யாரு?: அமரன் படத்தின் அறிவிப்பின் போதே சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் பூஜையில் பங்கேற்றனர். ஆனால், இன்று அவசர அவசரமாக நடைபெற்ற பட பூஜையில் தனுஷ் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளார். வெற்றிமாறன், ராஜ்குமார் பெரியசாமி, அன்புச் செழியன் உள்ளிட்டோர் மாலை அணிந்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மீண்டும் சாய் பல்லவியே ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

அமரன் வெற்றி: ராஜ்கமல் நிறுவனம் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்த அமரன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்யவுள்ள நிலையில், படத்தின் தரத்தை பார்த்து வியந்த நடிகர் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உடனடியாக அன்புச் செழியன் தயாரிப்பில் இந்தப் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சிவகார்த்திகேயன் படத்தின் இயக்குனரை தனுஷ் டிக் செய்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இட்லி கடை முடிந்தாவது இளையராஜா பயோபிக் பக்கம் தனுஷ் போவார் என நினைத்த ரசிகர்களுக்கு தற்போது ராஜ்குமார் பெரியசாமி படம் தான் அடுத்து ரெடியாகும் என்பது கன்ஃபார்மாகியுள்ளது. ரசிகர்களும் இந்த படத்தை தான் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











