Sai Pallavi: சாய் பல்லவி நம்பரை முதலில் பட்டப் பெயரில்தான் சேவ் செய்தேன்.. அமரன் இயக்குநர் ஓபன்!

சென்னை: இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் வெற்றி பெற்ற படங்களில் அதிகம் வசூலைக் குவித்த படங்களில் ஒன்று அமரன். ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸான படம் அமரன். இந்தப் படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்தது. படம், வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நடிகை சாய் பல்லவியின் நம்பரை தனது மொபைலில் தான் முதன் முதலில் பதிவு செய்தது தொடர்பாக ராஜ்குமார் பெரியசாமி ஒரு இடத்தில் பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

நடிகை சாய் பல்லவி தற்போது இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக உள்ளார். இவரது நடிப்புத் திறமை மற்றும் நடனமாடும் திறன் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டதால், இந்திய அளவில் டாப் கதாநாயகியாக உள்ளார். இவர் நடித்து கடைசியாக வெளியான படம், அமரன். இப்படம் தமிழ், மலையாளம், தெலங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.

amaran rajkumar periyasamy sai pallavi

படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. அமரன் படத்தின் திரைக்கதை அரசியல் அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி, வசூலில் சாதனை படத்தது. படம் உலகம் முழுவதும் ரூபாய் 320 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரும் கவனம் பெற்றது. பலர் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறினர்.

amaran rajkumar periyasamy sai pallavi

விருதுகள்: அமரன் படம் அண்மையில் நடைபெற்று முடிந்த, சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நடிகை என அவருக்கு விருது கொடுக்கப்பட்டது. படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநர் விருது கொடுக்கப்பட்டது. படத்திற்கு இசை அமைத்த ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது கொடுக்கப்பட்டது.

amaran rajkumar periyasamy sai pallavi

சாய் பல்லவி: இந்நிலையில் பேட்டி ஒன்றில் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி குறித்து கூறியுள்ளார். அதில், " எனக்கு ஒருவருடைய நம்பரை போனில் சேவ் பண்ணும்போது, அவர்களின் உண்மையான பெயரைப் போட்டு பதிவிடாமல், அவர்களுக்கென ஒரு நிக் நேம் அதாவது பட்டப்பெயர் வைத்து வித்தியாசமாக பெயர் வைத்து சேவ் செய்யும் பழக்கம் உள்ளது.

amaran rajkumar periyasamy sai pallavi

பட்டப் பெயர்: அதுபோலத்தான் சாய் பல்லவிக்கு 16 வயது இருக்கும்போது அவரின் எண்ணை நான் ' ஹீரோயின்' என பதிவு செய்தேன். எந்த காரணத்திற்காக நான் அவ்வாறு செய்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால், சாய் பல்லவி தனது 16வது வயதிலேயே, கதாநாயகி ஆவதற்காக தடயங்களைக் காட்டினார். அந்த அளவுக்கு அவரிடம் திறமை இருந்தது. இப்போது அவர் தனது நடிப்புத் திறமையால், நாட்டின் முன்னணி நடிகையாக திகழ்கின்றார்" எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

amaran rajkumar periyasamy sai pallavi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X