Amaran Box Office: 200 கோடியை நெருங்கிய அமரன்.. இந்தியளவில் 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கிய நிலையில், ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது அந்த படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகளும் போராட்டங்களும் வெடித்து வருகின்றன. சாப்பிட்டு சாய்ந்திரமாக தேடலாம் என்பது போல இவ்வளவு லேட்டாவாகவா படத்தை எதிர்ப்பீர்கள் என சிவகார்த்திகேயன் ஹேட்டர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் உருவ பொம்மைக்கு பதிலாக கமல்ஹாசன் உருவ பொம்மையையே மீண்டும் எரித்து போராடி வருகின்றனர்.

amaran box office sivakarthikeyan

அமரன் படத்தில் மேஜர் முகுந்தை பிராமணராக காட்டவில்லை என்கிற பிரச்சனை ஓய்ந்த நிலையில், தற்போது இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சித்தரித்து விட்டார் என சர்ச்சைகள் வெடித்துள்ளன. இந்நிலையில், அமரன் படத்தின் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமரன் இந்திய வசூல்: அமரன் திரைப்படம் 8 நாட்களில் இந்தியளவில் 121.85 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல் நாளில் உலகளவில் 42 கோடி ரூபாய் வசூலை அமரன் செய்ததாக ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுவரை எந்தப் படத்துக்கும் சொல்லாமல் அமரன் படத்துக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் எல்லாம் சொல்றாரே கமல்ஹாசன் என கேள்வி எழுந்தது. அதன் பின்னர் 150 கோடி வசூலை அமரன் கடந்ததை கூட சிவகார்த்திகேயன் தான் வெற்றிவிழாவில் சொன்னாரே தவிர ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

200 கோடி வசூலை நெருங்கிய அமரன்: உலகளவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் நடித்த அமரன் திரைப்படம் 191 கோடி ரூபாய் வசூலை கடந்த 9 நாட்களில் ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர். சனிக்கிழமையான இன்றுடன் 200 கோடி ரூபாய் வசூலை அமரன் அள்ளிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் மட்டுமின்றி அடுத்த வாரமும் கங்குவா படத்துடன் அமரன் படமும் சேர்ந்து ஓடும் என்கின்றனர்.

தியேட்டர்களை தக்க வைக்கும் ரெட் ஜெயண்ட்: அமரன் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் ரிலீஸ் ஆக காத்திருக்கும் சூர்யாவின் கங்குவா படத்துக்கு அனைத்து தியேட்டர்களும் கிடைப்பது கஷ்டம் தான் என்கின்றனர். உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கங்குவா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் அமரன் படம் குறிப்பிட்ட அளவிலான தியேட்டர்களை அடுத்த வாரமும் ஹோல்ட் செய்யும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X