Sivakarthikeyan: ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய எஸ்.கே.. இதிலும் குறை கண்டுபிடித்த இணையவாசிகள்
சென்னை: தமிழ் சினிமாவில் தனது அயராத உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னத்திரையில் தான் சேர்த்து வைத்திருந்த ரசிகர்கள் பட்டாளத்தையும் தனது திறமையும் நம்பி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கு உத்வேகமாக இருக்கின்றது எனக் கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரைப் பிடிக்காத நபர்களே தமிழ் நாட்டில் மிகக் குறைவுதான் எனக் கூறும் அளவிற்கு சினிமாவிலும் ரசிகர்களைச் சம்பாதித்து வைத்துள்ளார். அண்மையில் தனது ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரது நடிப்பில் தொடக்கத்தில் காமெடியான படங்கள் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் சீரியஸான கதைகளைத் தேர்வு செய்து நடித்தார். அதுவும் ஒர்க்-அவுட் ஆக ரசிகர்கள் மத்தியில் பக்கா கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தைப் பெற்றார்.

நடிப்பது, பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என தனது திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டு இருந்த சிவகார்த்திகேயன், அதன் பின்னர் சிறந்த கதைகளை தேர்வு செய்து தயாரிக்கவும் செய்கின்றார். அண்மையில் இவரது தயாரிப்பில் வெளியான கொட்டுக்காளி படம் உலக சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயன் தனது படங்களின் ரிலீஸ் சமயங்களில் மட்டும் இல்லாமல், தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது ரசிகர்களைச் சந்தித்து வருகின்றார்.
குழந்தைக்கு பெயர்: அந்த வகையில் அவரது ரசிகர் ஒருவர் அவரிடம் தனது குழந்தைக்கு சிவகார்த்திகேயன் தான் பெயர் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ரசிகரின் கோரிக்கையை ஏற்ற சிவகார்த்திகேயன், ரசிகரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து, அவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார். ரசிகரின் வீட்டிற்கு சிவகார்த்திகேயன் சென்றால், ரசிகர்களின் அதிகம் கூடிவிடுவார்கள் என்பதால் ரசிகரின் குடும்பத்தினைரை நேரில் வரவழைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், அவர்களுடன் சிறிது நேரம் பேசி, நலம் விசாரித்து அதன் பின்னர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

குறை: குழந்தைக்கு பெற்றோர்கள் ஏற்கனவே நைனிதா கிருஷ்ணன் என பெயர் தேர்வு செய்து வைத்திருந்ததால், அதே பெயரை மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லியுள்ளார். மேலும் குழந்தையின் கன்னத்தில் முத்தமும் கொடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவை ரசிகரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் செம க்யூட்டாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த சந்திப்பு படப்பிடிப்புத் தளத்தில் நடந்ததாக கூறப்படுகின்றது. ஆனாலும் தனது ரசிகரின் குடும்பத்தை ஏதே தோட்டத்தில் நிறுத்தி பெயர் சூட்டி அனுப்பியுள்ளார் எனவும், படப்பிடிப்புத் தளமாக இருந்தாலும், அவரது கேரவனில் அமரவைத்து பேசியிருக்கலாமே என குறை கூறி வருகின்றனர்.

படங்கள்: சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி அமரன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. அண்மையில் வெளியான விஜய்யின் கோட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் திரையில் தோன்றிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











