எவ்வளவு பிசினாலும் குருவை மறக்கலாமா எஸ்.கே? பாண்டிராஜ் பர்த்டேவுக்கு இதுவரை ஒரு வாழ்த்து சொல்லலயேப்பா!

By mohanraj

சென்னை: தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் விஜய் டிவி வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு அரியாசனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி அதற்கடுத்து விஜய் டிவியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை

சிவகார்த்திகேயன் ஒரு ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார் என்றால் அவரைக் கண்டு ரசிப்பதற்கு மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். இப்படி சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தை பாண்டிராஜ் தயாரித்தும் இருந்தார். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் விமலை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தை இயக்கியிருந்தார் பாண்டிராஜ். மெரினா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் ஜனரஞ்சகமாக வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலகட்ட சினிமாவில் மிக முக்கியமான படங்களாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.

Sivakarthikeyan Director Pandiraj

இயக்குநர் பாண்டிராஜ்

சின்னத்திரையில் இருந்த சிவகார்த்திகேயனை வெள்ளி திரைக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இன்று அதாவது ஜூன் 7ஆம் தேதி இயக்குநர் பாண்டிராஜ் தனது 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாரிக்குவித்தது‌. தன இயக்கம் படங்கள் மூலம் பெரும்பாலும் ஏதாவது ஒரு சமூக கருத்தை வெளிப்படுத்துபவர் இயக்குனர் பாண்டிராஜ்.

வாழ்த்து சொல்லாத எஸ்.கே

என்ன நிலையில் இன்று அவர் தனது 48 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவருக்கு பல்வேறுத்துறை உலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாண்டிராஜ் அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன் இதுவரை அவருக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காதது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது. குறிப்பாக என்னதான் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதும் படங்களை தயாரிப்பதிலும் பிஸியாக இருந்தாலும் தன்னை வளர்த்து விட்ட இயக்குநருக்கு ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம் என்றும் பேச்சுகள் கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகின்றது.

அமரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X