பவர்ஃபுல் நடிகருடன் இணையும் அமரன் பட இயக்குநர்.. அப்ப கோலிவுட்ல பெரிய சம்பவம் இருக்கு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ரிலீசாக வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் வார இறுதி நாட்கள் மட்டும் இல்லாமல் வார நாட்களும் வசூல் மழையை பொழிந்து வருகின்றன.

இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் அனுபவித்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அவர் தனது சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

sivakarthikeyan amaran movie rajkumar periyasamy

அமரன் படம்: கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் சர்வதேச அளவில் ரசிகர்களை அதிக அளவில் பேச வைத்த இயக்குனர் என்றால் அது ராஜ்குமார் பெரியசாமிதான். அவரது இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியானது அமரன் படம். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு அந்த அளவிற்கு ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கொடுத்துள்ளனர். படத்தை பார்த்து அவர்கள் யாரும் ஒரு துளி கண்ணீரையாவது சிந்தாமல் வெளியில் வர முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி: அந்த அளவுக்கு அமரன் படத்தை நெகிழ்ச்சியாக கொடுத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஐந்து நாட்களில் 170 கோடி வசூலை தாண்டியுள்ளது. வாரயிறுதி நாட்களில் மட்டும் இல்லாமல் வார நாட்களிலும் ஹவுஸ்ஃபுல்லாகவே காணப்படுகிறது. இந்த படத்தின் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை கொடுத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படத்தில் தன்னால் சிறப்பான நடிப்பையும் வழங்க முடியும் என்று சிவகார்த்திகேயன் நிரூபித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்தப்படம்: அவருக்கு இணையாக போட்டி போட்டுக் கொண்டு நடித்து முடித்துள்ளார் சாய் பல்லவி. நேற்றைய தினம் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நெகிழ்ச்சியான பல தருணங்களை சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்களது இந்த வெற்றி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் தங்களையும் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து இந்த படம் சக்சஸ்ஃபுள்ளாக ஓடிவரும் நிலையில் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படம் குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது. நீண்ட காலங்களாகவே அவர் நடிகர் தனுஷுடன் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்திய ராஜ்குமார் பெரியசாமி: இந்நிலையில் இது குறித்து தற்போது ராஜ்குமார் பெரியசாமியும் மனம் திறந்து பேசியுள்ளார். தன்னுடைய அடுத்த படத்தில் கோலிவுட்டின் பவர்ஃபுல் நடிகருடன் தான் இணைய உள்ளதாகவும் ஆனால் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். அமரன் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ள ராஜ்குமார் பெரியசாமி பவர்ஃபுல் நடிகரான தனுஷை எப்படி ஆட்டுவிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் தற்போதே தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X