Amaran: தீபாவளி ரேஸுக்கு தயார்.. நரம்பு புடைக்க டப்பிங் செய்யும் எஸ்.கே.. வீடியோ வெளியிட்ட இயக்குநர்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் அமரன். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், தீபாவளிக்கு அஜித்தின் விடாமுயற்சி படமும் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளின்போது, சிவகார்த்திகேயன் நரம்பு புடைக்க பேசும் வீடியோவை படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்னர் விஜய் டிவி வாயிலாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு அரியாசனத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்னர் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறி அதற்கடுத்து விஜய் டிவியின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் சிவகார்த்திகேயன்.

amaran sivakarathikeyan sivakarathikeyan dubbing video

சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார் என்றால் அவரைக் கண்டு ரசிப்பதற்கு மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். இப்படி சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளர்: தொடர்ந்து காமெடியான ஜனரஞ்சகமான படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கொஞ்சம் சீரியஸான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது சிவகார்த்திகேயன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துளார். இதுமட்டும் இல்லாமல் பாடல்கள் எழுதுவது, பாடல்கள் பாடுவது மற்றும் படங்கள் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகின்றார். இவர் தயாரித்து நடித்திருந்த கனா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இவரது தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி தான்.

amaran sivakarathikeyan sivakarathikeyan dubbing video

அமரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராக உள்ள திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். சாய் பல்லவி கதாநாயகனாக நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமரன் படத்தினை வரும் அக்டோபர் 31ஆம் தேதி, அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

வீடியோ: இதனால் படத்தின் டப்பிங் பணிகள், பின்னணி இசை கோர்ப்புப் பணிகள் என அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் படத்தின் டப்பிங் பணிகளின்போது சிவகார்த்திகேயன், டப்பிங் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக நரம்பு புடைக்க சிவகார்த்திகேயன் டப்பிங் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

ஏ.ஆர். முருகதாஸ்: இதை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி ஸ்வந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கேமியோ செய்கின்றார் என கூறபடுகின்றது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கின்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X