சிவகார்த்திகேயனின் அமரன் டைட்டில் டீசர் பார்த்த மேஜர் முகுந்த் மனைவி.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயனின் 21வது படமாக அமரன் படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளுடன் நேற்று கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக அமரன் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார்.

அதில், ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டியிருந்தார். சிவாகார்த்திகேயனை வித்தியாசமான லுக்கில் காட்டிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு இடத்தில் மேஜர் முகுந்த் என்கிற சட்டையில் உள்ள நேம் பேட்ஜையும் காட்டி ஏற்கனவே கசிந்த தகவல் எல்லாம் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

Amaran My eternal one Major Mukund Varadarajan wife gives thumbs up to Sivakarthikeyan movie

இந்நிலையில், அமரன் படத்தின் டைட்டில் டீசரை பார்த்து விட்டு மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வெளியிட்டுள்ள போஸ்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமரன் என்னுடைய மரணமில்லாதவன்: அமரன் மை எட்டர்னல் ஒன் என தனது பதிவின் தொடக்கத்திலேயே படத்திற்கு தம்ப்ஸ் கொடுத்து விட்டார் இந்து ரெபேக்கா வர்கீஸ். தனது கணவர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்து 10 வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகம் என்றுமே மறக்காது.

இப்படியொரு படத்தை எடுக்கிறோம் எனக் கேட்டபோது என்னால் மறுப்பு சொல்லவே முடியவில்லை. முகுந்த் எனும் ராணுவ வீரர் இந்த படத்தின் மூலம் மேலும் அறியப்படுவார். நாட்டுக்காக உயிரைக் கொடுத்த ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கான சமர்ப்பணமாக நிச்சயம் இந்த அமரன் இருக்கும் என நம்புகிறேன்.

உயிரிழக்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்கள் குடும்பத்திலும் வலிகள் நிறைந்திருந்தாலும், அவை எல்லாமே ஒரு உன்னத நோக்கத்திற்காக என எண்ணும் போது பெருமையடையத்தான் செய்வார்கள். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

நம்பியதற்கு நன்றி: இந்து மேடம் என்னையும் என் டீமையும் நம்பியதற்காக நிச்சயம் உங்களுக்கு எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன். ரொம்ப நன்றி என அமரன் படத்தை இயக்கி உள்ள ராஜ்குமார் பெரியசாமி மேஜர் முகுந்த் மனைவி இந்துவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

சாய் பல்லவி கேரக்டர்: சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த்தாக நடித்துள்ள நிலையில், அவரை திருமணம் செய்து கொள்வது, போனில் பேசுவது, கடைசியாக சவப்பெட்டியில் வரும் கணவரின் உடலை பார்த்து கதறி அழுவது என இந்துவாகவே நடித்து ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்துவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X