அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழலில் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் உள்ளதாக திடுக்கிட வைக்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை வெளியான தமிழ் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், ஏதாவது ஒரு புதிய படம் வெளியாகி வெற்றி பெறட்டும். ரசிகர்கள் தியேட்டர் பக்கம் வரட்டும். உடனடியாக படங்களை வெளியிடலாம் என யோசித்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

சில பெரிய படங்கள் ஏற்கனவே ஒவ்வொரு மாதத்தையும் புக் செய்து வைத்துள்ள நிலையில், முழுவதும் ரெடியாகி இருக்கும் பல படங்கள் இன்னமும் எந்த தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்கிற குழப்பத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.
அமரன் முதல் கங்குவா வரை: சிவகார்த்திகேயனின் அமரன், சூர்யாவின் கங்குவா, சியான் விக்ரமின் தங்கலான், நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை, சூரி நடித்துள்ள விடுதலை 2 என பல படங்கள் முழுவதும் தயாரான நிலையில், ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பதாக கூறுகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாமல் வெளியானால் பாலிவுட் படங்கள் ஃபிளாப் ஆகி வருவது போலத்தான் பெரிய படங்களே வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸில் படுத்து விடும் என்கின்றனர்.
1000 கோடி தொட்ட மல்லுவுட்: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மலையாள திரையுலகம் பிரமயுகம், பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேஷம், வர்ஷங்களுக்கு சேஷம் என வரிசையாக 100 கோடி வசூலை கடந்து ஒட்டுமொத்தமாக 1000 கோடி வசூலை மலையாள திரையுலகம் இந்த ஆண்டு முதல் 4 மாதத்திலேயே அள்ளியிருப்பதாக கூறுகின்றனர்.
600 கோடி நஷ்டம்: ஆனால், அதே நேரத்தில் பாலிவுட் திரையுலகம் பெரும் பட்ஜெட்டில் எடுத்த ஃபைட்டர், படே மியான் சோட்டே மியான், மைதான் உள்ளிட்ட படங்கள் வரிசையாக ஃபிளாப் ஆன நிலையில், சுமார் 600 கோடி நஷ்டமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பூனைக்கு யாரு மணி கட்டுவது: அக்ஷய் குமாரை வைத்து சூர்யா தயாரித்துள்ள சூரரைப் போற்று இந்தி ரீமேக் படமும் ரிலீஸ் தேதி அறிவிக்காமல் இருக்க அதுதான் காரணம் என்கின்றனர். அக்ஷய் குமாரின் படங்கள் ஒன்றாவது ஓடினால் கூட இதை வெளியிடும் முடிவில் சூர்யா இருப்பதாக கூறுகின்றனர். தமிழ் சினிமாவிலும் தற்போது பூனைக்கு யார் மணி கட்டுவது என பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
இந்தியன் 2 மாற்றுமா? மாட்டுமா?: இந்த வாரம் வெளியாகப் போகும் விஷாலின் ரத்னம், அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் அரண்மனை 4, மே 10ம் தேதி வெளியாகவுள்ள கவினின் ஸ்டார் மற்றும் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு என அனைத்து படங்களும் அடி வாங்கும் என்கிற கணிப்புகள் தான் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகி மாற்றத்தை கொண்டு வந்தால் தான் உண்டு என்கின்றனர். அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் அடி வாங்கினால் விஜய்யின் கோட் அல்லது ரஜினிகாந்தின் வேட்டையன் தான் இந்த ஆண்டு தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











