twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தின் ஃபேவரைட் இயக்குனர் சரணுக்கு இன்று பிறந்த நாள்.. வி.ஐ.பிக்கள் வாழ்த்து !

    |

    சென்னை : அஜித்தின் பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான சரண் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்..

    காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற வெற்றி படங்களை அஜித்திற்கு கொடுத்த இயக்குனர் சரணுக்கு அஜித் ரசிகர்கள் சார்பாகவும் பல வாழ்த்துக்கள் குவிந்து வருக்கிறது.

    மேலும் இவர் தனது 54 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு நண்பர்களும் ரசிகர்களும் மற்றும் திரைப் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

    முன்னாள் காதலிய குறை சொல்வீங்களா? சுஷாந்த் மரணம்.. கெட்ட வார்த்தையால் திட்டும் பிரபல நடிகை!முன்னாள் காதலிய குறை சொல்வீங்களா? சுஷாந்த் மரணம்.. கெட்ட வார்த்தையால் திட்டும் பிரபல நடிகை!

    புதுப்புது அர்த்தங்கள்

    புதுப்புது அர்த்தங்கள்

    கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக புதுப்புது அர்த்தங்கள் படத்தின் மூலமாக இணைந்தார். பிரபல பத்திரிகை நிறுவனத்தில் கார்டுனிஸ்ட்டாகவும் அதேசமயம் இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் சில நாட்களுக்கு பின் அந்த பத்திரிகையில் இருந்து வெளிவந்து முழுநேர உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு தனது முதல் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே திருமணம் நிச்சயமான ஒரு பெண் மற்றொரு ஆணுடன் காதல் வயப்பட்டார் என்ற ஒற்றை வரியை கதையின் மைய கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது காதல் மன்னன்.

    முதன்முதலாக நடித்தார்

    முதன்முதலாக நடித்தார்

    பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான எம் எஸ் விஸ்வநாதன் அவர்களை காதல் மன்னன் படத்தின் மூலம் முதன்முதலாக நடிக்கவும் வைத்தார். இந்த படத்துக்கு இசையமைத்த பரத்வாஜ் இதற்கு முன் தெலுங்கில் தொடர்ந்து இசையமைத்து வந்த இவருக்கு தமிழில் இதுவே முதல் படமாகும். மேலும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் அஜித் குமார் தனது சிறப்பான நடிப்பை இதில் வெளிப்படுத்தி தான் ஒரு வெற்றி நாயகன் என அனைவரையும் சொல்ல வைத்தது இந்த படம்.

    அஜித் ஷாலினி காதல்

    அஜித் ஷாலினி காதல்

    காதல் மன்னன் அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையிலும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தயாரிப்பாளருக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையவில்லை. இதைக் கேள்விப்பட்ட அஜித் அந்த பேனருக்கு மீண்டும் அமர்க்களம் என்ற படத்தை நடித்துக் கொடுத்தார். சாதாரண ஒரு கதை களத்தை கையில் எடுத்து மிகத் திறமையான திரைக்கதை அமைத்து இயக்குனர் சரணின் இயக்கத்தில் அஜித்துடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவான இந்தப் படம் வெளியான அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. மேலும் இந்த படம் அஜித் சரண் வெற்றிக் கூட்டணிக்கு ஆழமான வித்திட்டது போன்று அஜித் ஷாலினி காதலுக்கும் இந்தப் படம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

    மூன்றாவது முறையாக

    மூன்றாவது முறையாக

    இவ்வாறு தொடங்கிய அஜித் சரண் கூட்டணி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காதல் மன்னன் மற்றும் அமர்க்களம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த வந்த இவருக்கு அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே வெற்றி ஜோடி என அனைவராலும் புகழப்பட்ட பிரசாந்த் மற்றும் சிம்ரன் இவர்களை வைத்து பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். மேலும் பிரசாந்த் மற்றும் சிம்ரன் சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படமாக இது அமைந்தது அதுமட்டுமல்லாமல் சிம்ரன் இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

    அட்டகாசப்படுத்தியது

    அட்டகாசப்படுத்தியது

    இந்த வெற்றியை தொடர்ந்து ஜெமினி, வசூல்ராஜா, ஜே ஜே என பல முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட்டான படங்களை கொடுத்து வந்தாலும் ரசிகர்கள் பலரும் அஜித் சரண் கூட்டணியில் மற்றுமொரு படத்தை எதிர்பார்த்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் 2004 ஆம் ஆண்டு அட்டகாசம் என்ற படத்தில் இணைந்து அட்டகாசப்படுத்தி இருப்பார்கள் மேலும் இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய ஹிட் அடித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

    சறுக்கலை சந்தித்து

    சறுக்கலை சந்தித்து

    இவ்வாறு தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைந்த அசல் படம் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இதுவரை நடிகராக மட்டும் இருந்த அஜித் குமார் இந்த படத்திற்கு சரணுடன் இணைந்து கதையும் எழுதியிருந்தார் இதனாலேயே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வந்த நிலையில் மிக பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இந்த படம் முதன்முறையாக சறுக்கலை சந்தித்தும் எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு படம் தோல்வியை தழுவியது.

    திரையுலகமே எதிர்நோக்கி

    திரையுலகமே எதிர்நோக்கி

    அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் வினைய்யை வைத்து ஆயிரத்தில் இருவர் மற்றும் பிக்பாஸ் புகழ் ஆரவ்வை வைத்து மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தையும் சமீபத்தில் இயக்கியிருந்தார். இவ்வாறு தனது திரைப்பயணத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கான ஒரு நிரந்தரமான இடத்தையும் அஜித் ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வந்த இவர் மீண்டும் அஜீத் குமாருடன் இணைவதை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

    இன்று பிறந்த நாள்

    இன்று பிறந்த நாள்

    தனது அட்டகாசமான படங்களின் மூலம் அனைவரையும் தொடர்ந்து அமர்க்களப்படுத்தி வந்த இயக்குனர் சரண் ஜூன் 16 ஆம் தேதியான இன்று தனது 54 வது பிறந்தநாளை அனைவரின் ஆசியுடன் கொண்டாடி வருகிறார். மேலும் இவரது பிறந்தநாளுக்கு நண்பர்கள் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். குறிப்பாக அஜித் ரசிகர்கள் இவரை வெகுவாக வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Amarkalam director saran birthday special
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X