அஜித்தை பார்க்க முடியாமல் தவித்த ஷாலினி..கதறி அழுத அந்த நிமிஷம்.. இயக்குநர் சொன்ன சுவாரசியத் தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறார். பல முன்னணி இயக்குனர்களுடன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,அஜித் ஷாலினி காதல் குறித்து இயக்குநர் சரண் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

சினிமாவில் காதலுக்கும் திருமணத்திற்கும் பஞ்சமே இல்லாத அளவிற்கு பல காதல் ஜோடிகள் இருக்கிறார்கள். அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரை தொடர்ந்து காதல் திருமணம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் அனைவரின் வாயில் வரும் பெயர் அஜித் ஷாலினி தான். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.

Amarkalam Director saran interview about Ajith Shalini love story

நடிகை ஷாலினி அஜித்குமார்: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பேபிஷாலினி, குழந்தை நட்சத்திரமாகவே 55க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் க்யூட்டான அழகும் பேச்சும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். குழந்தையாக பல படத்தில் நடித்த ஷாலினி கதாநாயகியாக 7 படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்

அஜித்/ஷாலினி காதல்: அதற்குப் பின்னர் இரண்டாவது படமாக அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். அப்போதுதான் அஜித் ஷாலினி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அமர்க்களம் படத்தின் ஷுட்டிங்கின் போது நடிப்பைத் தாண்டி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அக்கறை காட்டத் தொடங்கி உள்ளார்கள் இதுகுறித்து இயக்குநர் சரண் அளித்துள்ள பேட்டியைப் இப்போது பார்க்கலாம்.

பிறந்த நாளுக்கு ஷாலினி கொடுத்த கிப்ட்: அமர்க்களம் ஷுட்டிங்கின் போது அஜித் என்னிடம் சரண் ஷூட்டிங்க சீக்கிரம் முடிச்சிடுங்க, இல்லனா நான் ஷாலினியை லவ் பண்ணிடுவேன் என்று சொல்லி சிரித்தார். இதைக் கேட்டுக்கொண்டு இருந்த ஷாலினி அப்போ வெட்கப்பட்டு சிரிச்சாங்க. அப்போது, அஜித்தின் பிறந்தநாள் வந்துச்சு, அவருக்காக ஷாலினி சில பரிசு பொருட்களை என்னிடம் கொடுத்து, இதை இன்று இரவு அஜித்தின் அறையில் வைத்து விடுங்கள் என்றார் நானும், அப்படியே அஜித்தின் அறையில் வைத்துவிட்டேன். ஆனால், அது என்ன கிப்ட் என்று எனக்குத் தெரியாது.

கதறி அழுத ஷாலினி: இந்த நேரத்தில் தான், அமர்க்களம் படத்தின் படப்பிடிப்புக்காக மூணாருக்கு செல்ல வேண்டி இருந்தது. நானும் அஜித்தும் கொச்சின் சென்று அங்கிருந்து 3 மணி நேரம் பயணம் செய்து. படப்பிடிப்பு தளத்திற்கு போனோம், அந்த நேரத்தில் எங்களால் யாருக்கும் போன் செய்ய முடியவில்லை. ஒருவழியாக போய் சேர்ந்தோம். ஆனால், எங்களுக்கு முன்பாகவே ஷாலினி அங்கே வந்துவிட்டார். எங்களை பார்த்ததும், ஓடி வந்த ஷாலினி, ஏன் எனக்கு ஒரு போன் கூட பண்ணல, ஏதாவது பிரச்சனையானது என பயந்து விட்டேன் என அழத்தொடங்கி விட்டார்.

மகிழ்ச்சியாக இருக்கு: அப்போதுதான் எனக்கு இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி காதலிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நல்ல படியாக நான் நினைத்தபடியே இருவரும் திருமணம் செய்துகொண்டு, சினிமாவில் மற்ற தம்பதிகளுக்கு முன் உதாரணமாக இருவரும் வாழ்த்து வருகின்றனர். அவர்கள் வாழ்வதை பார்க்க உண்மையில் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குநர் சரண் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X