டிவி சேனல்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தினமும் சூப்பர்ஹிட் படங்கள் தான்.. இன்னைக்கு #Amarkalam!

சென்னை: டிவியில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் படம் என்பதை ட்விட்டரை திறந்து பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு மக்கள் தங்கள் லாக் டவுன் நேரத்தை, கே டிவியில் போடும் படங்கள் வரை ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Ajith fans create hashtag on Amarkalam movie and make it trending in Twitter

முத்து, கில்லி படங்களை தொடர்ந்து இன்னைக்கு காலையில் கே டிவியில் போடப்பட்ட தல அஜித்தின் அமர்க்களம் படத்தின் ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல், எதை டிரெண்ட் செய்வது என்று தெரியாமல் இருந்த தல ரசிகர்களுக்கு காலையிலேயே அமர்க்களமான ஜாக்பாட் அடித்துள்ளது.

டிவிக்கு முன்

டிவிக்கு முன்

ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் லாக் டவுன் போடப்பட்டுள்ள நிலையில், மக்களின் பெரிய பொழுதுபோக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மாறியுள்ளன. பாட்டிகளும், தாத்தாக்களும் பார்த்துக் கொண்டிருந்த கே டிவியை தற்போது, இளசுகளும் பார்த்து, சமூக வலைதளங்களிலும் அந்த படத்தின் காட்சிகள் குறித்து விவாதித்து, தங்களின் லாக் டவுன் நேரத்தை கழித்து வருகின்றனர்.

அஜித் லவ்

அஜித் லவ்

சிறு வயது முதலே பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த பேபி ஷாலினி, ஹீரோயினாக சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதிலும், தல அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ஒரே படமான அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கில் இருவருக்கும் மலர்ந்த காதல் வெற்றிகரமான இத்தனை ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு வித்திட்டுள்ளது.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ம் ஆண்டு ரிலீசான படம் அமர்க்களம். இந்த படத்தில் இடம்பெற்ற சத்தம் இல்லாத தனிமை கேட்டேன், காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா, மேகங்கள் என்னைத் தொட்டு போவதென்ன, உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட், படமும் அஜித் மற்றும் ஷாலினிக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கொடுத்தது.

டிரெண்டிங்

முத்து, கில்லி, மங்காத்தா படங்களை தொடர்ந்து, அனைத்து டிவிக்களும், தினமும் மக்களுக்கு பிடித்தமான எவர்க்ரீன் படங்களை களமிறக்கி வருகின்றன. இன்று காலை கே டிவியில் போடப்பட்ட அமர்க்களம் படத்தை தல ரசிகர்கள், #Amarkalam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சென்னை அளவில் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். காலையிலே தல தரிசனம் கிடைத்ததாகவும் ட்விட்டரை தெறிக்கவிடுகின்றனர்.

உன் மடி வேணும்

என்றுமே தல ரசிகர்களின் ஃபேவரைட் படமான அமர்க்களம் டிவியில் ஒளிபரப்பாகி உள்ள நிலையில், அந்த படத்தின் வசனங்களையும், காட்சிகளையும், பாடல்களையும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு, அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். "என் மனசுக்கு ஒரு அடைக்கலம் வேணும், நான் அழுவ உன் மடி வேணும், உன் ரூபத்தில எனக்கு ஒரு அம்மா வேணும்..!" என்ற வசனம் வைரலாகி வருகிறது.

ரகுவரன் உடன் அஜித்

அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் ரகுவரன் நடித்திருப்பார். ரகுவரனுடன் தல அஜித் ஆக்ரோஷமாக பேசும் வசன காட்சிகளை மொபைல் மூலம் வீடியோ எடுத்தும் ரசிகர்கள் ஷேர் செய்து தங்களின் ஆர்வத்தையும், குவாரண்டின் நேரத்தையும் தங்களுக்கு தெரிந்த முறையில் செலவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X