ரியல் மரண மாஸ்னா அது இதுதான்.. அமெரிக்க நடன நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்.. உலகளவில் டிரெண்டிங்!

Recommended Video

ரியல் மரண மாஸ்னா அது இதுதான்.. அமெரிக்க நடன நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்.. உலகளவில் டிரெண்டிங்! - வீடியோ

சென்னை: அமெரிக்காவின் நடன நிகழ்ச்சியில், மரண மாஸ் பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய வீடியோ உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

பேட்ட திரைப்படத்தில் அனிருத் இசையில் வெளியான மரண மாஸ் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி அசத்தியுள்ளனர்.

America's got Talent நிகழ்ச்சியில் V. Unbeatable எனும் இந்திய நடனக் குழு இந்த வெறித்தனமான பர்ஃபார்மன்ஸை கொடுத்து தமிழர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழ் பாட்டு

உலகப் புகழ்பெற்ற America's Got Talent நடன நிகழ்ச்சியில், இந்தியாவை சேர்ந்த V. Unbeatable குழு பேட்ட படத்தில் அனிருத் இசையில் வெளியான அட்டகாசமான மரண மாஸ் பாடலுக்கு, மரண மாஸான நடனத்தை ஆடி அனைவரையும் அசத்தியுள்ளனர். அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோவில் தமிழ் பாடலான மரண மாஸ் ஒலித்துள்ளது தமிழர்களின் பெருமை என பலரும் #MaranaMass ஹாஷ்டேக்கை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி சல்யூட்

ரஜினி சல்யூட்

அமெரிக்கா காட் டேலன்ட் ரியாலிட்டி ஷோவில் நடுவர்களுக்கு ஆரம்பத்தில் மாலை போட்டு, அசத்தலான ஆட்டத்தை ஆடி அரங்கையே அதிர வைத்த வி. அன்பீட்டபள் குழுவினர், மரண மாஸ் பாடலின் இறுதியில் தலைவர் சல்யூட்டை அடித்து அமர்களப்படுத்தியது வேற லெவலில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் ஆஜர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன், சசி குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பேட்ட படத்தின் முதல் பாடலான மரண மாஸ் பாடல் அமெரிக்க காட் டேலன்ட் நிகழ்ச்சியை தெறிக்க விட்ட நிலையில், அந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் ஷேர் செய்துள்ளது.

சின்ன பையன் மாஸ்

மரண மாஸ் பாடலுக்கு அமெரிக்காவின் நடன நிகழ்ச்சியில் பக்காவாக இந்திய நடனக் குழு அதிரடி ஆட்டம் போட்டு உலகளவில் டிரெண்ட் செய்து வருகிறது. அதிலும், மரண மாஸ் பாடலின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சின்ன பையன், நடுவர்களுக்கு மாலை போட்டும், தாவியும் பறந்தும் ஆடி அசத்தினார். இறுதியாக தலைவர் ஸ்டைலில் சல்யூட் வைத்ததும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

சர்வதேச அளவில்

மரண மாஸ் பாடலை அமெரிக்க காட் டேலன்ட் எனும் நடன நிகழ்ச்சியில் அரங்கேற்றி சர்வதேச அளவுக்கு வி. அன்பீட்டபள் குழு கொண்டு சேர்த்துள்ளது என்றும், 100 சதவீதம் ஸ்டன்னிங்கான அவர்களின் பர்ஃபார்மன்ஸை பார்த்த நடுவர்களில் ஒருவரான் ஹோவி மண்டேல் உடனடியாக கோல்டன் பஸரை அழுத்தினார் என்ற தகவலையும் இந்த நெட்டிசன் பகிர்ந்துள்ளார்.

ஷாந்தனு பாக்கியராஜ்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் நடிகர் சாந்தனு பாக்கியராஜ், இந்த வீடியோவை ஷேர் செய்து, அவர்களின் நடனம் தான் ரியல் மரண மாஸாக இருந்தது என்றும், என்ன ஒரு எனர்ஜி அந்த பசங்க கிட்ட என்றும் ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே பல ரஜினி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

லைகா vs சன் பிக்சர்ஸ்

தர்பார் படத்தின் 25வது நாளுக்கு கூட ட்வீட் போடாத லைகா நிறுவனம் எங்க? ஜஸ்ட் மரண மாஸ் சாங் யூஸ் பண்ணிருக்காங்கன்னு ஷேர் பண்ற சன் பிக்சர்ஸ் எங்க.. சூப்பர் அட்மின் என தலைவர் 168 படத்துக்கான அடுத்த அப்டேட்டுக்கு அடி போடுகிறார் இந்த நெட்டிசன். நிஜமாகவே லைகா நிறுவனத்தை விட அப்டேட் கொடுப்பதில் சன் பிக்சர்ஸ் கிங்காக இருக்கிறது என்பது தான் உண்மை.

மொக்கை லைகா

சன் பிக்சர்ஸ் நாங்க உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்.. மொக்கை லைகா புரொடக்‌ஷன்ஸ் கிட்ட இருந்து வெளிய வந்தாச்சு.. தலைவர் 168 அப்டேட் இனி தெறிக்கும் என இந்த நெட்டிசனும், ஒழுங்கா அப்டேட் கொடுக்க மாட்டேங்குது லைகா என தனது ஆதங்கத்தை புலம்பி தள்ளி உள்ளார். அடுத்தது தலைவர் 168க்கான அப்டேட் எப்போ என ரசிகர்கள் பலரும் ட்வீட் போட்டு வராங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X