ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்..' ரிலீஸ் தேதியை அறிவித்தது அமேசான்!
சென்னை: ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்களின் ரிலீஸ் தேதியை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ளது.
Recommended Video
ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். இதை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

லாக்டவுன்
கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இந்த படத்தை, சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படம் மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா பிரச்னை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. லாக்டவுன் முடிந்து அவைத் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

கேள்விக்குறி
இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது ரிலீஸ் ஆகும் என்பதும் கேள்விகுறியாக இருக்கிறது. ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் கிடைக்குமா என்பதிலும் சிக்கல். அப்படி ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

பொன்மகள் வந்தாள்
இதனால், படங்களை நேரடியாக OTT -யில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடப் படக்குழு முடிவு செய்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தப் படம் மே 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. அன்று ரிலீஸ் ஆகவில்லை.

நேரடியாக ஓடிடி
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அமேசான் பிரைம் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 29- ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. அதோடு, நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' படமும் நேரடியாக அமேசானில் வெளியாகிறது. அந்தப் படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது.

பெஞ்ச் ஸ்டோன்
'பெண்குயின்' படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் ஸ்டோன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. ரிலீஸுக்கு ரெடியாக இருந்த நேரத்தில் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











