விஸ்வாசம் படத்தை வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்... ஆனால் 'கண்டிஷன்ஸ் அப்ளை'...!
விஸ்வாசம் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சென்னை : விஸ்வாசம் படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் உரிமையை பெரிய தொகை கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி ரிலீசாகிறது. 2018 ஆம் ஆண்டில் அஜித் படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால், இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

இப்படத்தின் டிரைலர் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கும் அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் பெரிய தொகையை கொடுத்திருக்கிறது. இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய தொகையாம் அது.
இதன் மூலம் விஸ்வாசம் படத்தை ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம். ஆனால் தியேட்டரில் ஓடி முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே கண்டிஷன்.


Click it and Unblock the Notifications











