மாதவனின் அந்த படத்தை வாங்கிய அமேசான் பிரைம்.. ஆனால் இப்படியொரு கண்டிஷன் அதுல இருக்காம்?

சென்னை: தியேட்டர்காரர்களுக்கும் ஓடிடி தள உரிமையாளர்களுக்கு புது வாய்க்கா வரப்பு சண்டையே வந்துவிடும் போல தெரிகிறது.

Recommended Video

Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

அதுவும் கொரோனா பாதித்த இந்த நேரத்தில், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் ஷட்டரை சாத்திவிட்டு உட்கார்ந்து இருக்கும் நிலையில், ஆன்லைன் சினிமா வியாபாரம் சூடு பறக்கிறது.

மாதவன், அனுஷ்கா நடிப்பில் வெளியான நிசப்தம் படத்தின் சர்ச்சை, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்களின் நேரடி ரிலீஸ் சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல், மாதவனின் இந்த படத்தை அமேசான் பிரைம் வாங்கி இருக்கிறதாம்.

இதுதான் எதிர்காலாமா?

இதுதான் எதிர்காலாமா?

தியேட்டருக்கு சென்று மக்கள் படங்களை பார்க்க முடியாவிட்டாலும், புதுப்படங்களை நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ5 சினிமா, எம்.எக்ஸ் பிளேயர் இன்னும் இதுபோன்ற பல ஓ.டி.டி. தளங்களில் மக்கள் கண்டு ரசிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், இதுதான் எதிர்காலம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

தியேட்டர்கள் உரிமையாளர்கள் புலம்பல்

தியேட்டர்கள் உரிமையாளர்கள் புலம்பல்

இந்த லாக்டவுன் நேரத்தில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு அமேசான் பிரைம் வலைவிரித்து வருகிறது. ஒரு படம் தியேட்டரில் வந்த பிறகு ஒரு மாதம் கழித்து ஆன்லைனில் வெளியானால், தியேட்டர்காரர்களுக்கு பாதிப்பில்லை என்றும், தியேட்டருக்கு முன்பாக படம் ஆன்லைனில் வெளியானால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என புலம்பி வருகின்றனர்.

மாதவன் படம்

மாதவன் படம்

மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள நிசப்தம் படத்தையும் தியேட்டருக்கு வருவதற்கு முன்னதாக அமேசான் பிரைமில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதை மறுத்தும், ஆமோதித்தும், எதிர்த்தும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மாதவனின் அடுத்த படத்தையும் அமேசான் கைப்பற்றி இருக்கிறது.

மலையாள ரீமேக்

மலையாள ரீமேக்

துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் உரிமையைத் தான் அமேசான் பிரைம் அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அந்த கண்டிஷன்

அந்த கண்டிஷன்

ஆனால், மாறா படம் தியேட்டரில் வெளியான பிறகு தான் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்ய வேண்டும் என்ற கண்டிஷன் போட்டுத் தான் தயாரிப்பு தரப்பு அந்த படத்தின் ஆன்லைன் உரிமையை அமேசான் பிரைமுக்கு விற்று உள்ளனர். மாறா படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்னும் முடியாத நிலையில், அமேசான் பிரைம் அதை வாங்கியுள்ளது மாதவன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Read more about: maara madhavan மாதவன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X